எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: ஜன.17ல் இல் பொது விடுமுறையா? அரசு விரைவில் அறிவிப்பு!
அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஜனவரி 17ஆம் தேதியன்று அரசு விடுமுறை விட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா வரும் 17ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஆளும்கட்சியான அதிமுக ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
2017ஆம் ஆண்டு ஜனவரி 17 தொடங்கி 2018 ஜனவரி 17ஆம் தேதி வரை எம்.ஜி.ஆர். பிறந்த தினத்தைக் கொண்டாடவும் அந்தக் கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பொங்கல் விடுமுறைக்குப் பின்னர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்த தினம் 17ஆம் தேதியன்று வருவதால் பொது அரசு விடுமுறை விட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பொது விடுமுறை என்பது ஊதியத்துடன் கூடியதாக இருக்கும். மத்திய-மாநில அரசுகளின் விடுமுறைப் பட்டியலில் இல்லாத தினங்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க முடியாது. எனவே, இதற்கென தனியான உத்தரவு பிறப்பிக்கப்படும் பட்சத்தில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை கொடுக்கப்படும்.
இந்த விடுமுறையை விடுவதற்கான பைல்கள் கையெழுத்திடப்பட்டு, அதற்கான அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனவரி 17ஆம் தேதி பொது விடுமுறையாக அறிவிக்கப்படும் அரசு ஊழியர்களுக்கு மொத்தம் 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும். கடந்த மாதம் டிசம்பர் 6ஆம் தேதி ஜெயலலிதா மறைவினை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பொது விடுமுறை விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications