இதுதான் தீபா வெளியிட்ட எம்ஜிஆர் அம்மா தீபா பேரவைக் கொடி
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா பேரவை தொடங்கி அதன் கொடியை வெளியிட்டுள்ளார். அந்தக் கொடி ஏற்கனவே உள்ள அதிமுக கொடி போன்றே உள்ளது.
சென்னை: அதிமுக கொடி போன்றே ஒரு கொடியை தயார் செய்து எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் கொடி இதுதான் என்று தீபா இன்று செய்தியாளர்களிடம் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
திமுகவில் இருந்து எம்ஜிஆர் பிரிந்து அதிமுகவை உருவாக்கியதன் அடையாளமாக திமுகவின் கருப்பு சிவப்பு நிறக் கொடியின் இடையில் வெள்ளை நிறத்தை சேர்த்து அதிமுகவின் கொடியை எம்ஜிஆர் உருவாக்கினார்.

ஜெயலலிதா இறப்பிற்கு பின்னர் அரசியலில் குதித்துள்ள தீபா அவரது கட்சியை அதிமுக கொடியைப் போன்றே வேறுபாடுகள் இன்றி உருவாக்கி அறிமுகம் செய்துள்ளார்.
அந்தக் கொடியில் திமுக கொடியின் அடையாளமான கருப்பு நிறம் மேல் புறமும், சிவப்பு நிறம் கீழேயும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் நடுவில் தீபாவின் அத்தையான ஜெயலலிதாவிடம் எம்ஜிஆர் செங்கோல் கொடுக்கும் படத்தை வட்ட வடிவத்தில் வைக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவிற்கு எம்ஜிஆர் செங்கோல் கொடுக்கும் படம் பிரசித்தி பெற்றது. எல்லா போஸ்டர்களிலும் இடம் பெற்று மக்கள் மனத்தில் பதிந்து போன படம் இது. இதைத்தான் தற்போது கொடியின் மையப் பகுதியில் தீபா வைத்துள்ளார்.
இது எந்த அளவிற்கு எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையையும், அதிமுகவின் கொடியையும் பிரித்து காட்டும் என்பது தெரியவில்லை.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications