அனுமதியின்றி வைக்கப்பட்ட எம்ஜிஆர், ஜெ. சிலைகள் அகற்றம்.. வாணியம்பாடியில் பரபரப்பு

அனுமதியின்றி வைக்கப்பட்ட எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள் அகற்றப்பட்டதால் வாணியம்பாடியில் பரபரப்பு ஏற்பட்டது.

Subscribe to Oneindia Tamil

வேலூர்: வாணியம்பாடி அருகே செட்டியப்பனூரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளை நெடுஞ்சாலை துறையினர் திடீரென அகற்றினர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் பஞ்சத்துக்குக்கு உட்பட்ட ஊர் நுழைவு வாயில் பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிலையும், அதன் அருகே எம்ஜிஆர் சிலையும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 24 ஆம் தேதி ஜெ.பிறந்த நாளில் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் சிலைகளுக்கு அப்பகுதியை சேர்ந்த அதிமுகவினர், பொதுமக்கள் மாலை அணிவித்தனர்.

MGR, Jayalalithaa's statues removal from vaniyambadi

இதனிடையே அனுமதியின்றி நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமான இடத்தில் 2 சிலைகள் வைக்கப்பட்டிருந்ததால் அதனை அப்புறப்படுத்த நெடுஞ்சாலைதுறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் தாசில்தார் முரளிகுமார் தலைமையில் வருவாய்துறையினர் மற்றும் மாநில நெடுஞ்சாலை துறை அலுவலர்கள் மற்றும் வாணியம்பாடி தாலுகா போலீஸார் முன்னிலையில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர்கள் ஜெயலிலதா, எம்ஜிஆர் சிலைகளை அகற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+