எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடத்தி ஆதரவாளர்களை திரட்டும் ஒபிஎஸ்... திருவான்மியூரில் இடம் தேர்வு
சென்னை திருவான்மியூரில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை நடத்த ஒபிஎஸ் அணி சார்பில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: ஓபிஎஸ் அணி சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக திருவான்மியூரிடம் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா பொதுக்குழு நடத்திய இடத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முனுசாமி பார்வையிட்டனர்.
2015-ம் ஆண்டு அதிமுக பொதுக்குழுவை திருவான்மியூரில் ஜெயலலிதா நடத்தினார். எம்ஜிஆர் நுற்றாண்டு விழா நடத்தி ஆதரவாளர்களைத் திரட்ட ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளார். சசிகலா அணியுடனான பேச்சுவார்த்தை தோல்வியடையும் பட்சத்தில் இதனை அதிமுக பொதுக்குழுவாக நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

தமிழ் திரையுலகில் முடிசூடா மன்னனாக கோலோச்சி, அதிமுகவை தொடங்கி, ஆட்சியை பிடித்தவர் எம்.ஜி.ஆர். அவரது நூற்றாண்டு விழாவை இந்த ஆண்டு முழுவதும் கொண்டாட வேண்டும் என விரும்பினார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவரது மறைவு அதிமுக கட்சியையே புரட்டிப் போட்டு விட்டது.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு ஜனவரி 17ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் அவரது சிலைக்கு, பொதுச் செயலாளர் சசிகலா மாலை அணிவித்து நூற்றாண்டு மலரையும் வெளியிட்டார்.
மத்திய அரசு வெளியிட்ட சிறப்பு தபால் தலையை சசிகலாவிடம், அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வழங்கினார். நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
சசிகலா அணி, ஓ.பி.எஸ் அணி என அதிமுக பிளவுபட்டதால் பொதுக்கூட்டங்கள் கூட நடத்தப்படாமல் உள்ளன.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை கொண்டாடினார். அவரது நினைவிடத்திற்கு சென்று மாலை அணிவித்தார். ஆனால் எம்ஜிஆரால் வாழ்ந்து கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் இதனை கொண்டாட நினைக்கவில்லை என்றே எம்ஜிஆரின் தொண்டர்கள் குற்றம் சாட்டினர். இந்த நிலையில்தான் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் என்று ஓ.பன்னீர் செல்வம் அறிவித்தார்.
இதற்கான இடம் திருவான்மியூரில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டு அதிமுக பொதுக்குழுவை திருவான்மியூரில் ஜெயலலிதா நடத்தினார். அதே இடத்தில் எம்ஜிஆர் நுற்றாண்டு விழா நடத்தி ஆதரவாளர்களைத் திரட்ட ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளார்.
சசிகலா அணியுடனான பேச்சுவார்த்தை தோல்வியடையும் பட்சத்தில் இதனை அதிமுக பொதுக்குழுவாக நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். இன்று விழா நடைபெறும் இடத்தை ஓபிஎஸ் தலைமையில் கே.பி முனுசாமி, மைத்ரேயன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் பார்வையிட்டனர்.
செய்தியாளர்களிடம் பேசிய கே.பி முனுசாமி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் விருப்பம் நிறுவனர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதே. அதன்படி அவரது நூற்றாண்டு விழாவை கொண்டாடப் போகிறோம் என்றார். எம்ஜிஆரின் மங்காத புகழ் இதன் மூலம் நிரூபிக்கப்படும் என்றும் முனுசாமி தெரிவித்தார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications