சட்டசபையில் எம்ஜிஆர், சிவாஜி பாடல்களை பாடி அசத்திய கருணாஸ் !
சென்னை: "நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற' என்பது உள்பட இரண்டு திரைப்பட பாடல்களை சட்டசபையில் பாடினார் நடிகரும், சட்டசபை உறுப்பினருமான கருணாஸ்.
சட்ட சபை விதி 110-ன் கீழ், முதல்வர் ஜெயலலிதா புதிய அறிவிப்புகளை வியாழக்கிழமை வெளியிட்டார். இதையடுத்து, கூட்டணி கட்சிகளான இந்திய ஜனநாயக மக்கள் கட்சியின் தமிமுன் அன்சாரி, கொங்கு இளைஞர் பேரவையின் தனியரசு, முக்குலத்தோர் புலிப்படை அமைப்பைச் சேர்ந்த கருணாஸ் ஆகியோர் முதல்வரை வாழ்த்திப் பேசினர்.

இதில், திருவாடானை தொகுதி உறுப்பினர் கருணாஸ் ஒரு படி மேலே போய் தனது பேச்சை திரைப்படப் பாடலாக பாடி சபையை கலகலப்படையச் செய்தார். தெய்வமே...தெய்வமே...நன்றி சொல்வேன் தெய்வமே, தேடினேன்.., தேடினேன் கண்டு கொண்டேன் அன்னையை'.....என்று புத்தகத்தில் இருந்த முதல்வர் ஜெயலலிதா படத்தை காட்டி, பாட்டுப் பாடினார் கருணாஸ். அதைத் தொடர்ந்து, பேசிய கருணாஸ் தனது பேச்சை திரைப்படப் பாடலைப் பாடி முடித்தார்.
"நீங்க நல்லா இருக்கோணும்....நாடு முன்னேற...இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற......நல்லவெங்கல்லாம் எல்லாரும் இனி உங்க பின்னாலே..... நீங்க...நினைச்சதெல்லாம் நடக்கும் உங்க கண்ணு முன்னாலே'....என்று பாடி முதல்வரை வாழ்த்தினார் கருணாஸ். கருணாஸ் பாட்டு பாட அதிமுக உறுப்பினர்கள் தாளம் போடுவதுபோல் மேஜையை தட்ட சட்டசபையே கலகலப்பாக இருந்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications