எம்.ஜி.ஆர். விஜயன் கொலை வழக்கில் பரபரப்பாக பேசப்பட்ட 'மர்மங்கள்'
சென்னை: எம்.ஜி.ஆர். வளர்ப்பு மருமகன் விஜயன் கொலை வழக்கில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். வளர்ப்பு மகள் பானு அக்கா கணவர் விஜயனை தீர்த்து கட்டியதால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் பரபரப்பாக பேசப்பட்ட சில விடை தெரியாத மர்மங்கள்...
- கொலையாளிகளுக்கு நகையை அடகு வைத்து பணம் கொடுத்தேன் என பானு ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தார்.

- ஆனால் பானு கூறியபடி எந்த ஒரு நகையுமே அடகு வைக்கப்படவில்லை.
- கொலையாளிகளுக்கு நகையை அடகு வைத்து பணம் கொடுக்கும் நிலையில் இருந்த பானு 2 சொகுசு கார்களை வாங்கியிருந்தார். இந்த சொகுசு கார்களுக்கு பணம் எப்படி வந்தது?
- விஜயன் கொலை அசைன்மெண்ட்டுக்குப் பின்னால் யாரோ இருக்கிறார்கள்... என கூறப்பட்டது... ஆனால் எவர் பெயரும் அதன் பின்னர் வெளியாகவில்லை.
- பானுவுக்கும் போலீஸ் கருணாவுக்கும் பாலமாக இருந்தவர் பானுவின் தோழி புவனா. புவனா துபாய்க்கு போனதாகவும் "புவனா ஒரு கேள்விக்குறி?"யாகவும் ஊடகங்கள் தலைப்பிட்டு செய்தி வெளியிட்டன...
இப்படி ஏகப்பட்ட கேள்விகளும் மர்மங்களும் கொண்ட விஜயன் கொலை வழக்கு ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது.












Click it and Unblock the Notifications