கோவில்பட்டியில் ”ஆவின்” பால் வேன் மோதி இளைஞர் பரிதாப பலி!
கோவில்பட்டி: கோவில்பட்டி மந்தித் தோப்பு சாலையில் நேற்று ஆவின் பால் ஏற்றி வந்த வேன், பைக் மீது மோதியதில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கோவில்பட்டி அன்னை தெரசா நகரைச் சேர்ந்தவர் தங்கச்சாமி மகன் சுப்புராஜ். கோவில்பட்டி புதுரோட்டில் உள்ள டாடா சுசிகி நிறுவன அலுவலகத்தில் சேல்ஸ் எக்ஸ்கியூட்டிவாக பணிபுரிந்து வந்த இவர் நேற்று வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது மந்தித்தோப்பு சாலையில் சென்று கொண்டிருந்த போது கோவில்பட்டி பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கத்திலிருந்து வந்த பால் வேனை முந்த முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் சுப்புராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இறந்த சுப்புராஜுக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவியும், அஸ்வின் என்ற மகனும் உள்ளனர். தகவலறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு சென்ற மேற்கு காவல் நிலைய போலீஸார் சடலத்தை கைப்பற்றி, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து, வேன் ஓட்டுநர் கோவில்பட்டி அறிஞர் அண்ணா நகரைச் சேர்ந்த வெ.ராமசாமியை கைது செய்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications