வேட்டியை கழட்டினாலும் ஸ்டாலின் முதல்வராக முடியாது... அமைச்சர் சி.வி.சண்முகம் கேவலமான பேச்சு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் சட்டையை கிழித்தாலும் வேட்டியை கழட்டினாலும் ஆட்சி அமைக்க முடியாது என்று அமைச்சர் சி.வி. சண்முகம் பேசியுள்ளார்.

சட்டவிரோத ஜனநாயக விரோத அதிமுக அரசை முடிவுக்குக் கொண்டு வர திமுக என்றுமே தயங்காது என்று ஸ்டாலின் நேற்று வெளியிட்டிருந்த அறிக்கையில் கூறியிருந்தார். இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக தலைவர் கருணாநிதி ஆட்சியை பிடிக்க முயன்றார் அது முடிந்ததா, இல்லையே. அதே போன்று தான் ஸ்டாலினும்.

Minister C.V.Shanmugam jibes over Stalin

சட்டசபையில் அராஜகம் செய்தவர் ஸ்டாலின், பிப்ரவரி மாதம் சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது டிராமா செய்து சட்டையை கழட்டி காண்பித்தார். ஆனால் வேஷ்டியையே கழட்டிக் காண்பித்தாலும் ஸ்டாலினால் முதல்வராக முடியாது என்றார்.

Kamal Hassan Ready to do Anything money Says CV Shanmugam-Oneindia Tamil

நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது குறித்து கருத்து தெரிவித்த போதும், ஓ.பன்னீர்செல்வம் குறித்த விமர்சனங்களை முன்வைக்கும் போது கடுமையான வார்த்தைகளை பிரயோகித்து வந்தார் அமைச்சர் சண்முகம். இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குறித்தும் கேவலமான கருத்தை கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் சண்முகம்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Minister C.V.Shanmugam jibes Stalin that he never become Chief minister of Tamilnadu and also adds all his efforts to fall the admk government will face failure only
Please Wait while comments are loading...