என் மருமகனைக் காப்பாத்த முடியாமப் போச்சே.. கதறி அழுத அமைச்சர்
சென்னை: தமிழக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் மருமகன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். அவரது இறுதிச் சடங்கின்போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கதறி அழுதார்.
தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் தங்கை முருகேஸ்வரியின் கணவர் தியாகராஜன். இவர் புற்றுநோய்க்கு சில ஆண்டுகளுக்கு முன்பு பலியானார். இந்த நிலையில் இவரது மகன் சுரேஷுக்கும் சமீபத்தில் புற்றுநோய் தாக்கியது தெரிய வந்தது. குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

22 வயதேயான சுரேஷுக்கு சமீபத்தில் வயிற்று வலி முற்றியது. இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. சுரேஷின் இறுதிச் சடங்கின்போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இதைச் சொல்லி சொல்லி அழுதார். எத்தனையோ நவீன வசதி இருந்தும், என் மருமகனின் உயிரைக் காப்பாற்ற முடியாமல் போய் விட்டதே என்று கூறி அவர் கதறி அழுதது அங்கிருந்தோரை நெகிழச் செய்தது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications