For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யாரை லஞ்ச ஆட்சி என்கிறீர்கள்? அரசை விமர்சித்தால் நாக்கை அறுப்பேன்.. அமைச்சர் சர்ச்சை பேச்சு!

அதிமுக அரசை தரக்குறைவாக விமர்சித்தால் நாக்கை அறுப்போம் என அமைச்சர் துரைக்கண்ணு பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

தஞ்சை: அதிமுக அரசை தரக்குறைவாக விமர்சித்தால் நாக்கை அறுப்போம் என அமைச்சர் துரைக்கண்ணு பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு திமுக- காங்கிரஸ் கட்சிகளே காரணம் என அதிமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.

[ ஜெ.வுக்கு அமெரிக்காவில் சிகிச்சையளிக்க மறுத்தது யார்?? ஓபிஎஸ் பரபரப்பு குற்றச்சாட்டு! ]

நேற்று தேனி, புதுக்கோட்டை, தஞ்சை என மாவட்ட தலைநகரங்களில் அதிமுக கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர்களின் பேச்சு அனலை கிளப்பியது.

சாதனை பட்டியல்

சாதனை பட்டியல்

தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற கண்டன கூட்டத்தில் வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு பங்கேற்றார். அப்போது பேசிய அவர் காவிரி டெல்டா பகுதியில் அதிமுக அரசு செய்த சாதனைகளை பட்டியலிட்டார்.

வறட்சி நிவாரண நிதி

வறட்சி நிவாரண நிதி

மேலும் 2247 கோடி ரூபாயை வறட்சி நிவாரண நிதியாக கொடுத்ததும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பள்ளிக்காப்பீட்டு தொகை 3452 கோடி ரூபாயை வாங்கிக்கொடுத்ததும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும்தான் என்றார்.

வறட்சியிலும் வளர்ச்சி

வறட்சியிலும் வளர்ச்சி

வறட்சியிலும் வளர்ச்சி கண்ட ஆட்சி இந்த அதிமுக ஆட்சிதான் என்றார். அதிமுக அரசை விமர்சிப்பவர்களையும் அமைச்சர் துரைக்கண்ணு சரமாரியாக சாடினார்.

நாக்கை அறுப்போம்

நாக்கை அறுப்போம்

மேலும் அவர் பேசியதாவது, யாரைப்பார்த்து லஞ்ச ஆட்சி என்கிறாய், குற்ற ஆட்சி என்கிறாய், தவறாய் பேசுகிறாய். தப்பாய் பேசினால் நாக்கை அறுத்துவிடுவோம். ஜாக்கிரதையாக இருங்கள்.

பேச்சால் சர்ச்சை

பேச்சால் சர்ச்சை

இது உத்தமர் ஆட்சி. ஜெயலலிதா வழியில் பொற்கால ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதா என்னென்ன செய்ய வேண்டும் என எண்ணினார்களோ அதனை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் செய்து வருகின்றனர்" இவ்வாறு அமைச்சர் துரைக்கண்ணு பேசினார்.

English summary
Minister Duraikannu has warned Tongues will be cut who criticizes ADMK govt. In Thanjavur ADMK meeting Minister said like this.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X