ஆட்சியை கலைக்க ஸ்டாலினும் தினகரனும் மாறி மாறி காலில் விழுகின்றனர்- அமைச்சர் ஜெயக்குமார்
ஆட்சியை கலைக்க டிடிவி தினகரனும், ஸ்டாலினும் இணைந்து கூட்டுச்சதி செய்கின்றனர் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்திற்கு எப்படியாவது முதல்வராகி விடவேண்டும் என்று துடிக்கும் ஸ்டாலின் தினகரனுடன் இணைந்து கூட்டுச்சதி செய்கிறார் என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் தங்கியுள்ள அமைச்சர் ஜெயக்குமார், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது பற்றி செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், சபாநாயகர் நடவடிக்கையை விமர்சிக்க கூடாது என்று கூறினார். சபாநாயகர் உத்தரவில் யாரும் தலையிட முடியாது என்றும் தெரிவித்தார்.
ஜெயலலிதா ஆசியுடன் நடைபெறும் ஆட்சியை கலைக்க முயற்சி செய்கின்றனர். தினகரனும் ஸ்டாலினும் இணைந்து கூட்டுச்சதி செய்கின்றனர்.
ஸ்டாலின் ஒரு சந்தர்ப்பவாதி முதல்வராகிவிட வேண்டும் என்ற ஆசையில் தினகரன் காலில் விழுகிறார். அதேபோல ஜெயலலிதா ஆசியுடன் நடைபெறும் ஆட்சியை கலைக்க தினகரன் முயற்சி செய்கிறார் இதற்காக ஸ்டாலின் காலில் தினகரன் விழுவதாகவும் கிண்டலடித்தார் ஜெயக்குமார்.
கட்சியில் எந்த குழப்பமும் இல்லை. ஆட்சி நன்றாக நடைபெறுகிறழ என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
தமிழகத்திற்கு தேவையான நிதியை பெறவே டெல்லி வந்திருப்பதாகவும், தேர்தல் ஆணையத்தை சந்திக்கும் எண்ணம் எதுவுமில்லை என்றும் கூறினார்.
சட்ட விதிகளுக்கு உட்பட்டே சபாநாயகர் எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்துள்ளார். இது ஜனநாயக ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றார். ஒ.பன்னீர் செல்வம் ஆதரவு எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையே என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், இது பற்றி தான் கருத்து கூற முடியாது என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications