முதலில் அத்தைக்கு மீசை முளைக்கட்டும்! - கமலை வெளுக்கும் அமைச்சர் ஜெயக்குமார்
Recommended Video

சென்னை: கமல் ஹாஸன் 100 நாளில் முதல்வராக, அரசியல் ஒன்றும் சினிமா அல்ல... முதலில் அத்தைக்கு மீசை முளைக்கட்டும். மற்றதை அப்புறம் பார்த்துக்கொள்வோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
கமல் ஹாஸன் அரசியல் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் நேற்று கூறுகையில், "மறைந்த தலைவர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உள்ளிட்டோர் சட்டமன்ற உறுப்பினராக இருந்து, எதிர்க்கட்சி தலைவராக இருந்து மக்களுக்கு சேவை செய்தனர். யாரும் 100 நாளில் முதல்வராவேன் என்று சொல்லவில்லை. சினிமா 100 நாள் ஓடுவதுபோல் கமல்ஹாசன் முதல்வர் ஆவேன் என்று கூறுகிறார். முதல்வர் பதவி என்பது மூர் மார்க்கெட்டில் விற்பனை செய்யும் பொம்மையா? மக்கள் அங்கீகாரம் செய்ய வேண்டும், மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நடிகர் சிவாஜி கணேசன் கட்சி ஆரம்பித்து ஒரு எம்.எல்.ஏ.வாகக் கூட முடியவில்லை. கூட்டம் கூடுவதை வைத்துக்கொண்டு முதல்வர் ஆவேன் என்று சொல்ல முடியாது. முதலில் இவருக்கு கூட்டம் வருகிறதா என்று பாருங்கள். அப்படி வந்தாலும் அது ஓட்டாக மாற வேண்டும். ஓட்டாக மாற மக்களோடு மக்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். ட்விட்டரில் மட்டும் இருந்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும்.
அடிப்படையில் மக்களை சந்தித்து, மக்களோடு மக்களாக அவர் இருந்து நல்லது செய்ய வேண்டும். முதலில் அத்தைக்கு மீசை முளைக்கட்டும். மற்றதை அப்புறம் பார்த்துக்கொள்வோம்," என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications