'சோடா பாட்டில்' ஜீயருக்கு அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம்
சோடா பாட்டில் வீச எங்களுக்குத் தெரியும் என்று ஜீயரின் பேச்சுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: சோடா பாட்டில் வீசவும் கற்களை எறியவும் எங்களுக்கும் தெரியும் என்று வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஜீயர் சடகோப ராமானுஜ ஜீயர் பேசியது கண்டனத்துக்குரியது என்று அமைச்சர் ஜெயக்குமார்
கடந்த 10 நாட்களுக்கு முன்னர் தினசரி பத்திரிகை நடத்திய ஒரு நிகழ்ச்சியில் ஆண்டாள் குறித்து மேல் நாட்டவர் எழுதிய கருத்தை வைரமுத்து மேற்கோள் காட்டியது தவறான அர்த்தத்தை குறிப்பதாக இருந்தது. இந்நிலையில் வைரமுத்துவுக்கு எதிராக ஜீயர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வலியுறுத்தி உண்ணாவிரதம் போராட்டம் நடத்தி வருகிறார். இந்நிலையில் வைரமுத்துவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற கண்டன பொதுக் கூட்டத்தில் ஜீயர் பேசுகையில், எங்களுக்கும் சோடா பாட்டில் வீச தெரியும், கற்களையும் வீச தெரியும். ஆனால் அவற்றை நாங்கள் செய்ய மாட்டோம். இறை நம்பிக்கைக்கு எதிராக யார் வந்தாலும் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்று ஜீயர் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதை கண்டித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பேசி வரும்நிலையில் ஜீயருக்கு எதிராக சமூகவலைதளங்களிலும் கருத்துகள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், சோடா பாட்டில் வீசுவோம் என்று ஜீயர் பேசுவது பொறுப்புள்ள பேச்சு இல்லை.
சோடா பாட்டில் வீசுவோம் என்று யார் கூறினாலும் அது கண்டனத்துக்குரியது. ஜீயரின் பேச்சு வன்முறையை தூண்டுவது போன்றே உள்ளது என்றார்
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications