காவிரி விவகாரம்: தமிழக குழுவை பிரதமர் சந்திக்க மறுப்பு என்பது தவறானது.. ஜெயக்குமார் விளக்கம்!
காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக குழுவை சந்திக்க மறுப்பதாக கூறுவது தவறு என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக குழுவை சந்திக்க மறுப்பதாக கூறுவது தவறு என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து இன்று ஆலோசனை நடத்தினார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் காவிரி விவகாரத்தில் தமிழக குழுவை பிரதமர் மோடி சந்திக்க மறுப்பதாக முதல்வர் கூறினார் என்று தெரிவித்தார்.

ஜெயக்குமார் விளக்கம்
இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் திமுக எம்பிக்கள் ராஜினாமா செய்ய தயார் என்றும் அவர் கூறினார். இந்நிலையில் ஸ்டாலின் பேச்சு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார்.

ஜெ. உண்ணாவிரதம்
அப்போது பேசிய அவர் காவிரிக்காக போராடியவர் ஜெயலலிதா என்றும் காவிரியில் தமிழகத்தின் உரிமையை பெற உண்ணாவிரதம் மேற்கொண்டவர் ஜெயலலிதா என்றும் கூறினார்.

ஜெயக்குமார் மறுப்பு
மேலும் காவிரி விவகாராத்தில் பிரதமர் மோடியை சந்திக்க தொடர்ந்து நேரம் கேட்டு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். தமிழக குழுவை பிரதமர் மோடி சந்திக்க மறுப்பதாக ஸ்டாலின் கூறியதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.

பிரதமர் சந்திப்பார்
மேலும் நீர்வளத்துறை அமைச்சரை முதலில் சந்தியுங்கள் என்றுதான் பிரதமர் மோடி கூறியுள்ளார் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார். நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்த பின் பிரதமர் சந்திப்பார் என நம்புவதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

அவசரப்பட வேண்டாம்
மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 6 வாரம் உச்சநீதிமன்றம் அவகாசம் அளித்த நிலையில் 2 வாரங்கள் தான் முடிந்துள்ளது என்றும் இன்னும் 4 வாரங்கள் உள்ளது என்றும் கூறிய ஜெயக்குமார் அதற்குள் அவசரப்பட்டு எந்த நிலைப்பாடும் எடுக்க வேண்டாம் என்றும் அவர் கூறினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications