ஜிஎஸ்டி அறிமுக விழா.. அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்பு !
டெல்லி: ஜிஎஸ்டி அறிமுக விழாவை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன. அதிமுக சார்பில் தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் இந்த விழாவில் பங்கேற்றுள்ளார்.
நீண்ட கால இழுபறிக்கு பிறகு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன் அறிமுக விழா நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் அனைத்து எம்பிக்களும் கலந்து கொள்ள வேண்டும் என பாஜக அரசு அழைப்பு விடுத்திருந்தது. அதேபோல் அதிமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உட்பட அனைத்துக் கட்சிகளுக்கும் பாஜக அழைப்பு விடுத்திருந்தது.

மத்திய அரசு அவசர கதியில் புதிய வரி விதிப்பு முறையை அமல்படுத்த முயல்வதாக கூறி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கூட்டத்தைப் புறக்கணிப்பதாக அறிவித்தது. அதேபோல் காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகளும் இந்த கூட்டத்தை புறக்கணித்துள்ளன.
இதே போன்று, பிகார் மாநிலத்தில் ஆளும் கட்சியுடன் கூட்டணியில் உள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் இந்த விழாவில் பங்கேற்கவில்லை. அதிமுக சார்பில் தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் ஜிஎஸ்டி அறிமுக விழாவில் பங்கேற்றுள்ளார்.
முன்னதாக சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், ஜிஎஸ்டி-யால் விலைவாசி உயராது. ஒருவேளை ஜிஎஸ்டி-யால் விலைவாசி உயரும் பட்சத்தில், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படும். விலை உயரும் பொருளின்மீது விதிக்கப்பட்டிருக்கும் வரியின் அளவு குறைக்கப்படும் என்றார்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications