"2011-ம் ஆண்டை நினைவுகூர்கிறேன்"... கருணாநிதிக்கு அமைச்சர் ஜெயக்குமார் இரங்கல்!
திமுக தலைவர் கருணாநிதிக்கு அமைச்சர் ஜெயக்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அமைச்சர் ஜெயக்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவு தமிழக மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக மீன வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரும் கருணாநிதியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 50 ஆண்டுகாலமாக ஒரு கட்சிக்கு தலைவராக இருந்து பொன்விழா கண்ட பெருமைக்குரியவர் கருணாநிதி என அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசியல் வரலாற்றில் திராவிட கட்சிகளின் பங்களிப்பு அளப்பரிய ஒன்று. பேரறிஞர் அண்ணாவால் துவக்கி வைக்கப்பட்ட திராவிட அரசியலில் முக்கிய தலைவராக விளங்கியவர் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மாண்புமிகு கலைஞர் திரு.கருணாநிதி அவர்கள். 50 ஆண்டுகாலமாக ஒரு கட்சிக்கு தலைவராக இருந்து பொன்விழா கண்ட பெருமைக்குரியவர்.
அரசியலைப் போன்றே திரைத்துறையில் அவர் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளார் என்பதை மறுக்க முடியாது. அவரது திரைப்பட வசனங்கள் இன்றளவும் பலராலும் நினைவுகூறப்படுகிறது.
2011-ஆம் ஆண்டு காலகட்டத்தில் நான் தமிழக சட்டபேரவை தலைவராக இருந்தபோது திமுக தலைவர் அவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து வைத்ததை இத்தருணத்தில் நினைவு கூறுகிறேன்.
உடல்நலம் குன்றி, சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த மனத்துயருற்றேன். அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், அவரது தொண்டர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்", என அவர் தெரிவித்துள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications