காவிரிக்காக ஐபிஎல் பார்க்க வேண்டாம் - அமைச்சர் ஜெயக்குமார்
காவிரிக்காக ஐபிஎல் போட்டிகளை பார்க்க வேண்டாம் என்று அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததற்காக கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் போட்டியை பார்க்க வேண்டாம் என்று அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு இதுவரை அமைக்கவில்லை.. இதற்காக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே ஐபிஎல் போட்டிகளை யாரும் பார்க்க வேண்டாம் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் தெரிவித்து வந்தனர். இதையடுத்து ஐபிஎல் போட்டிகள் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை அணிகளுக்கிடையே போட்டி நடைபெற்றது.

இளைஞர்களுக்கு அறிவுறுத்தல்
சென்னையில் வரும் 10-ஆம் தேதி சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியை நேரில் காண டிக்கெட் விற்பனை தொடங்கிவிட்ட நிலையில் இதை யாரும் கண்டு களிக்க வேண்டாம் என்று இளைஞர்களுக்கு அரசியல் கட்சிகள் அறிவுறுத்தியுள்ளன.

ஐபிஎல்லை பார்க்க வேண்டாம்
இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், சென்னையில் ஐபிஎல் போட்டியை நடத்துவது குறித்து கிரிக்கெட் வாரியம்தான் முடிவு செய்ய வேண்டும். அதை யாரும் பார்க்க வேண்டாம்.

மாநில அரசு தலையிட முடியாது
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கன்னடரான சூரப்பாவை ஆளுநர் நியமனம் செய்ததில் மாநில அரசு தலையிட முடியாது. இது முழுக்க முழுக்க ஆளுநருடன் தொடர்புடையது.

போராட்டம் நடத்த உரிமை உள்ளது
நடைப்பயணம் என்ற பெயரில் யாரும் பொதுமக்களுக்கு இடையூறு செய்ய வேண்டாம். போராட்டம் நடத்துவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால் அதனால் யாருக்கும் பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் போராட்டங்கள் இருக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
-
ஆர்சிபி வெற்றிக்கு 5 காரணங்கள்.. கார்த்திக் "அண்ணன்" பங்களிப்பை மறுக்க முடியுமா? -
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
நீதான்யா ஸ்பின்னர்.. எகனாமியை பாருங்கப்பா.. ஆர்சிபி வெற்றிக்கு காரணமே க்ருணால் பாண்டியா தான்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications