ஹே.. நானும் ரவுடிதான் என்பதை போல செயல்படுகிறார் ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை: நானும் ரவுடிதான் என்பதை போல் ஸ்டாலின் செயல்படுவதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள ஆதித்தனார் சிலைக்கு அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், திமுகவிற்கு அரசியல் பண்பாடும் நாகரீகமும் கிடையாது.

உரிய மரியாதை
திமுக பதவி வெறியும் ஆதங்கத்தோடும் இருப்பது ஸ்டாலினின் செயல்பாட்டிலேயே தெரிகிறது. எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் உரிய மரியாதை அளிக்கப்பட்டுள்ளது.

குடும்பச் சொத்து
ஸ்டாலின் ஏதோ நானும் ரவுடிதான் என்ற அடிப்படையில் செயல்படுகிறார். திமுக ஆட்சியில்தான் பல்வேறு ஊழல்கள் நடந்தன என்ற வரலாற்று உண்மையை அவர்கள் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. ஸ்டாலின் தனது குடும்பச் சொத்து என்ன என்பதை கூறுவாரா.

ஒன்றும் நடக்காது
ஈழ தமிழர்கள் விவகாரத்தில் வழக்கு பதிவு செய்து சட்ட ரீதியாக அணுக வேண்டும் என்று ஸ்டாலின் ஆசைப்படுகிறார். அது விரைவில் நிறைவேறும். சினிமாவில் நல்ல கருத்துக்களை பரப்பும் வேலையை இயக்குனர்கள் செய்ய வேண்டும். கமலும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும் சந்தித்ததால் எந்த மாற்றமும் வர ஏற்பட்டு விடாது.

திமுகவுக்கு நாவடக்கம் இல்லை
எங்கள் அமைச்சர்கள் நாவடக்கத்துடன் நடந்து கொள்கின்றனர். ஆனால் திமுகவினர்தான் நாவடக்கம் இல்லாமல் பேசி வருகின்றனர் என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications