காவிரி: தீர்ப்பை அமல்படுத்தாத மத்திய அரசு குறித்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு- அமைச்சர் ஜெயக்குமார்
உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அமைக்காதது குறித்து தெரிவிக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னை: காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காதது குறித்து உச்சநீதிமன்றத்தில் முறையிடுவோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 6 வாரங்கள் கெடு விதித்தும் அதை மத்திய அரசு அமல்படுத்தவில்லை. இதனால் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், காவிரி மேலாண்மை வாரியம், முறைப்படுத்தும் குழுவை உருவாக்க வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு.

எந்த கட்சியும் அழுத்தம் கொடுக்கவில்லை
6 வாரங்களில் இந்த தீர்ப்பை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும் என்று அதிமுகவும், தமிழக அரசும் அழுத்தம் கொடுத்தோம். இதுவரை எந்த கட்சியும், ஆட்சியும் இதுபோல் அழுத்தம் கொடுத்தது கிடையாது.

அதிமுக எம்பிக்கள் போராட்டம்
நாடாளுமன்றத்தில் அதிமுக எம்பிக்கள் போராட்டம் நடத்தியதால் 18 நாட்களுக்கு முழுமையாக முடக்கப்பட்டது. இதனால் அங்கு எந்த ஒரு அலுவலும் நடக்கவில்லை. காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதற்காக நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அதிமுக எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.

மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தல்
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தீர்மானமும் ஒருமித்தமாக நிறைவேற்றப்பட்டது. மேலும் சட்டசபையில் காவிரி உரிமையை நிலைநாட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

முறையிடுவோம்
உச்சநீதிமன்றத் தீர்ப்பு மிகவும் தெளிவாக உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் என்றுதான் சொல்லப்பட்டுள்ளது. காவிரி முறைப்படுத்தும் குழு என்றுதான் சொல்லப்பட்டுள்ளது. இதை எந்த வகையிலும் மாற்றம் செய்யக் கூடாது என்பது தான் எங்கள் நிலை. எனவே முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டத்தை மீண்டும் கூட்டி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தீர்ப்பை அமல்படுத்தாதது குறித்து முறையிடவுள்ளோம்.

எல்லா பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி
மாநில வளர்ச்சிக்காக மட்டுமே நாங்கள் மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தோம். ஆனால் மாநில அரசின் உரிமையை எந்த சூழலிலும் விட்டுக் கொடுக்கவில்லை. விட்டுக் கொடுக்கப் போவதுமில்லை. 17 ஆண்டுகளாக மத்திய அரசுடன் இணக்கமாக இருந்த திமுகவினர் நினைத்திருந்தால் எல்லா பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம்.

திமுக வெளியேறியதா
வாஜ்பாய் அரசு அமைத்தபோது மத்திய அரசுடன் அதிமுக கூட்டணியில் இருந்தது. அப்போது காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக அந்த கூட்டணியை முறித்து கொண்டது அதிமுக அரசு. ஆனால் 17 ஆண்டுகளில் திமுக அரசு மத்திய அரசுடனான உறவை முறித்து கொண்டிருக்கிறதா என்றால் இல்லை என்று ஜெயக்குமார் பேசினார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications