இதுக்காகதான் டிடிவி தினகரன் பொதுக்கூட்டம் நடத்துகிறாரா? அமைச்சர் அடடே விளக்கம்
டிடிவி தினகரன் கருப்பு பணத்தை வெள்ளை ஆக்குவதற்காக பொதுக்கூட்டம் நடத்துகிறார் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
Recommended Video

சென்னை: டிடிவி தினகரன் கருப்பு பணத்தை வெள்ளை ஆக்குவதற்காக பொதுக்கூட்டம் நடத்துகிறார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கும், அதிமுக அமைச்சர்களுக்கும் இடையே கடுமையான வார்த்தை போர் நிலவி வருகிறது.
இரு தரப்பும் ஒருவருக்கொருவர் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர். சமீபத்தில் பேசிய ஓபிஎஸ், ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே டிடிவி தினகரன் முதல்வராக சதித்திட்டம் தீட்டியதாக குற்றம்சாட்டினார்.

மனநலம் பாதிக்கப்பட்டவர்
இதற்கு பதிலடி கொடுத்த டிடிவி தினகரன், துணை முதல்வர் ஓபிஎஸ் மன நலம் பாதிக்கப்பட்டவர் போல் பேசுகிறார், நிறைய பொய் சொல்கிறார் என சரமாரியாக சாடினார்.

காளான்கள் முளைக்கும்
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தினகரனை வெளுத்து வாங்கினார். டிடிவி தினகரன் போன்ற காளான்கள் முளைக்கும்.

சொப்பனத்தில் காணும் அரிசி
டிடிவி தினகரன் கருப்பு பணத்தை வெள்ளை ஆக்கும் வகையில் ஆங்காங்கே ஒரு கூட்டத்தை போட்டு வருகிறார். ஒரு பழமொழி கூறுவார்கள் 'சொப்பனத்தில் காண்கின்ற அரிசி சோற்றிற்கு உதவாது'.

வாய்க்காலை தாண்ட வேண்டும்
கடலை தாண்ட ஆசை இருக்கலாம். ஆனால் அதற்கு கால் இருக்க வேண்டும். முதலில் வாய்க்காலை தாண்ட வேண்டும். வாய்க்கால் தாண்டவே முடியாதவர்கள் எப்படி சீட் பிடிப்பார்கள் என்பது உலக அதிசயம். இவ்வாறு கடுமையாக விமர்சித்தார் அமைச்சர் ஜெயக்குமார்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications