ஆளுநருடன் ஜெயக்குமார், தம்பிதுரை திடீர் சந்திப்பு.. என்ன நடக்கப் போகிறது?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார், லோக்சபா துணைத் தலைவர் தம்பிதுரை ஆகியோர் இன்று தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யசாகார ராவை திடீரென சந்தித்துப் பேசியுள்ளனர்.

அதிமுக இரண்டும் இணையப் போகின்றன. இதுதொடர்பாக பேச்சுக்கள் நடக்கவுள்ளன. இந்த நிலையில் அமைச்சரவையில் மாற்றம் செய்ய வேண்டிய சூழலும் உள்ளது.

Minister Jayakumar and Thambidurai meet Governor

மறுபக்கம் தினகரன் கைதாகும் நிலையில் உள்ளார். அமைச்சர்கள் சிலரின் வீடுகள் வருமான வரி சோதனைக்குள்ளாகியுள்ளன. இந்தப் பின்னணியில் தமிழகம் வந்துள்ளார் பொறுப்பு ஆளுநர். அவரை இன்று ஜெயக்குமாரும், தம்பிதுரையும் சந்தித்துப் பேசியுள்ளனர்.

அதிமுக இணையவுள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Minister Jayakumar, Thambidurai are discussing with Governor of TN (Incharge) Vidyasagar Rao about shuffling Cabinet ministers.
Please Wait while comments are loading...