ஸ்மார்ட் கார்டு இல்லாவிட்டாலும் அனைவருக்கும் ரேஷன் பொருட்கள்- தமிழக அரசு அறிவிப்பு
ஸ்மார்ட் கார்டு இல்லாவிட்டாலும் அனைவருக்கும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
திருவாரூர்: மார்ச் 1 முதல் ஸ்மார்ட் ரேஷன் கார்டு கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஸ்மார்ட் கார்டு இல்லாவிட்டாலும் அனைவருக்கும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று உணவு துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் நடக்கும் முறைகேடுகளை தவிர்க்க ரேஷன் கார்டுகளை ஸ்மார்ட் கார்டுகளான தமிழக அரசு வழங்கி வருகிறது. தமிழகத்தில் ஸ்மார்ட் கார்டுகள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் வழங்கி வருகிறது.

மையங்கள் மூலமாகவும் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமைச்சர் காமராஜ் கடந்த 2 நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ரேஷனில் பொருட்கள் பெற மார்ச் 1ம் தேதி முதல் ஸ்மார்ட் கார்டு கட்டாயம் என அவர் கூறியுள்ளார். பெரும்பாலானோருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுவிட்டதாகவும் அவர் கூறினார்.
ஸ்மார்ட் கார்டு இல்லாதோரும் ரேஷன் பொருட்களை பெறலாமா என்ற கேள்விக்கு அதுகுறித்து இப்போதே கூறமுடியாது. நெருக்கத்தில்தான் முடிவு எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.
நாடு முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து போடப்படுகிறது. திருவாரூரில் நடைபெற்ற முகாமில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கிவிட்டு அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஸ்மார்ட் கார்டு இல்லாவிட்டாலும் ரேஷன் பொருட்களை பெற்று கொள்ளலாம். பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் அனைவருக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications