பண்பொழி திருமலைக்கோவில் தங்கதேர் வெள்ளோட்டம் - அமைச்சர் தொடங்கி வைத்தார்

Subscribe to Oneindia Tamil

செங்கோட்டை: செங்கோட்டை அருகேயுள்ள பண்பொழி திருமலைக்கோவிலில் தங்கதேர் பவனி வெள்ளோட்டம் நடைப்பெற்றது.

இந்த தேரோட்டைத்தை மாநில அமைச்சர் செந்தூர்ப்பாண்டியன் தொடங்கி வைத்தார்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஏழாவது படை வீடு

ஏழாவது படை வீடு

தமிழகத்தில் ஆறுபடை முருகஸ்தலங்களுக்கு அடுத்தபடியாக ஏழாவது படைவீடாக எல்லோராலும் கருதப்பட்டு வணங்கப்பட்டுவருவது பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயிலாகும்.

சிவகாமி அம்மையார் முயற்சியால்

சிவகாமி அம்மையார் முயற்சியால்

கரிசல் குடியிருப்பு சிவகாமி அம்மையார் முயற்சியால் உருவாக்கப்பட்டு பின்னர் கேரளமன்னர்களால் புனரமைக்கப்பட்ட இந்த திருத்தலம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தனியாக உள்ள ஒரு குன்றில் கட்டப்பட்டதாகும்.

பல நூறு ஆண்டு பழமை

பல நூறு ஆண்டு பழமை

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவிலானது அருணகிரிநாதரால் பாடப் பெற்றது. புகழ்பெற்று விளங்கும் தலமாகும்.

ஆயிரக்கணக்கானோர் வருகை

ஆயிரக்கணக்கானோர் வருகை

இக் கோவிலுக்கு தினமும் உள்ளூர் மற்றும்,சுற்று வட்டார மக்கள் அண்டை மாநிலமான கேரளா, ஆந்திரா, உள்ளிட்ட பல்வேறு மாநில மக்களும்,மலேசியா உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் இடம் பெயர்ந்த தமிழர்களும் இங்கு வந்து முருகன் அருள் பெற்று செல்வது வழக்கம்.

குற்றாலத்திற்கு வருவோர்

குற்றாலத்திற்கு வருவோர்

புகழ் பெற்ற குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளும் இக்கோவிலுக்கு வந்து முருகபெருமான் அருள் பெற்று செல்வது குறிப்பிடத்தக்கது. இக்கோயிலில் உள்ள படிகளில் முதியவர்கள் ஏறிசென்று சாமி கும்பிட முடியாது என்ற நிலை இருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து ,ஆன்மீக வாதிகள் முயற்சி மேற்கொண்டு பொது மக்களிடமும்,தங்களது முயற்சியாலும் கடந்த திமுக ஆட்சியில் பல கோடி ரூபாய் செலவில் மலைப்பாதை அமைக்கப்பட்டது.

பக்தர்கள் வருகை அதிகரிப்பு

பக்தர்கள் வருகை அதிகரிப்பு

மலைப் பாதை அமைக்கப்பட்ட பின்பு கோவிலுக்கு வரும் பக்தர்களின் வருகை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மேலும் இங்கு வரும் முருக பக்தர்களின் நெடுநாள் கனவான தங்கத் தேர் அமைக்கும் விருப்பத்தினையடுத்து பொது மக்கள் ஒத்துழைப்புடன் அவர்களது பங்களிப்புடன் தங்கத் தேர் அமைக்கும் பணி கடந்த மாதம் தொடங்கியது.

தங்கத் தேர்

தங்கத் தேர்

தேர் ஓடுவதற்கான ஓடுதளம் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. தங்கத்தேருக்கான மரத்தேரும், தேரில் சிலைகளுக்கு மெருகூட்டும் பணிகள் இரவு பகல்பாராது முழு வீச்சில் நடந்து வந்தது. இப்பணிகள் கடந்த இரு தினங்களுக்கு முன் தங்கத்தேர் செய்யும் பணி முழு வீச்சில் முடிவடைந்த நிலையில் நேற்று இரவு 7 மணிக்கு தங்கதேர் வெள்ளோட்டம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

அமைச்சர் செந்தூர்ப்பாண்டியன்

அமைச்சர் செந்தூர்ப்பாண்டியன்

தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன்,சங்கரன் கோவில் சட்டமன்ற உறுப்பினர் முத்துச்செல்வி, நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் சமய மூர்த்தி, நெல்லை மாவட்ட எஸ்.பி.விஜேயந்திர பிதரி உள்ளிட்டோர் தொடங்கி வைத்து கோவில் வளாகத்தில் சுமார் அரை கிலோ மீட்டர் தேரை அமைச்சர் செந்தூர் பாண்டியன் எழுத்து சென்றார். தங்க தேர் பவனியை பார்க்க சுமார் 5ஆயிரம் பக்தர்கள் திரண்டு வந்து பார்வையிட்டு ஆன்மீக கோஷங்களை எழுப்பினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+