வேகமெடுக்கும் இன்ப்ளூயன்ஸா ப்ளூ காய்ச்சல்.. தமிழகத்தில் மீண்டும் லாக்டவுனா? அமைச்சர் பதில்
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுமா- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்
கள்ளக்குறிச்சி: தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுமா என்ற கேள்விக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார்.
கோடை காலம், குளிர்காலம், மழைக்காலங்களில் பொதுவாக சீதோஷ்ண மாற்றத்தினால் வைரஸ் காய்ச்சல்கள் பரவும். இது ஓரிரு நாட்களில் வந்துவிடும் பிறகு குணமாகிவிடும். ஆனால் தற்போது கோடை காலம் தொடங்கிய நிலையில் எச்3என்2 என்ற புதிய வகை வைரஸ் பரவி வருகிறது.
நாடு முழுவதும் இந்த புதிய காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் இடைவிடாத இருமல், தொண்டை வலி, உடல் வலிகளால் பாதிக்கப்படுகிறார்கள். இந்த காய்ச்சலின் அறிகுறிகள் குறித்து மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வைரஸ் காய்ச்சல்
இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்தும் தகவல்கள் வெளியானது. தமிழகத்திலும் இந்த வைரஸ் காய்ச்சல் தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. இந்த வைரஸ் காய்ச்சல் சிறுவர்களையும் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைந்தவர்களையும் எளிதாக தொற்றுகிறது. இந்த காய்ச்சல் சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வேகமாக பரவி வருகிறது.

காய்ச்சல் தாக்கம்
மருத்துவ ரீதியாக இந்த காய்ச்சலின் தாக்கத்தை பொருத்து 3 வகையாக பிரித்துள்ளார்கள். ஏ டைப் லேசான காய்ச்சல், பி டைப் மிதமான காய்ச்சல், சி டைப் தீவிரமான காய்ச்சல். இதில் சி டைப் காய்ச்சல் வயதானவர்களிடம் தான் காணப்படுகிறது. இவர்களுக்கு சுவாச பிரச்சினையும் ஏற்படுத்துவதால் கட்டாயம் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்படும்.

உடல் வலி
சாதாரண காய்ச்சலாக இருந்தாலும் இருமல், உடல் வலி போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தி ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் வரை சிரமப்பட வைப்பதால் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பாதிப்பு இருப்பவர்களை கண்டறிந்து உரிய சிகிச்சைகள் வழங்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 1000 இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம் நடத்தப்படும்.

மருந்து மாத்திரைகள்
தேவையான அளவிற்கு மருந்து, மாத்திரைகள் கையிருப்பு உள்ளன. அதனால் பதட்டம் கொள்ள தேவையில்லை. காய்ச்சல், தலைவலி, தொண்டை வலி, உடல்வலி உள்ளவர்கள் 3, 4 நாட்கள் ஓய்வு எடுத்துக்கொண்டால் குணமாகும். இந்த பாதிப்புடன் வெளியே வந்தால் இருமல் வரும்போதும், தும்மல் வரும்போதும் அதில் இருந்து வெளியே வரும் நீர்துவாளைகள் மூலம் மற்றவர்களுக்கு பரவக் கூடும். அதனால் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார்.

காய்ச்சல்
இந்த நிலையில் காய்ச்சல் அதிகமாக பரவி வருவதால் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. கள்ளக்குறிச்சியில் சிறுவங்கூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சேவையை அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

மீண்டும் ஊரடங்கா
செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில் தமிழகத்தில் காலியாக உள்ள அரசு மருத்துவ பணியிடஙகளுக்கு விரைவில் மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள் என கூறினார். மேலும் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் அளவுக்கு காய்ச்சல் பரவவில்லை என மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications