சென்னை வந்தார் நிதின் கட்கரி... கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரிப்பு
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க சென்னை வந்து இருக்கிறார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.
Recommended Video

சென்னை: சென்னை காவேரி மருத்துவமனைக்கு வந்த மத்திய அமைச்சர் நிதின்கட்கரி திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மோசமடைந்து இருக்கிறது. காவேரி மருத்துவனை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

அவரது உறுப்புகள் செயலிழந்து இருக்கிறது, அதேபோல் மூச்சு விடுவதிலும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இன்று காலை அவருக்கு உடல்நிலையில் சுணக்கம் ஏற்பட்டது. அவருக்கு 10வது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது அவரை சந்திக்க மத்திய அமைச்சர்கள், தமிழக அமைச்சர்கள் வருகை புரிந்தனர்.சென்னை வந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி காவேரி மருத்துவமனையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அவரது உறவினர்களிடம் விசாரித்து விட்டு சென்றார்.












Click it and Unblock the Notifications