மயிலாப்பூர் எம்எல்ஏ நட்ராஜ் அமைச்சர் பாண்டியராஜன் சந்திப்பு.. விரைவில் ஓபிஎஸ் பக்கமா?
அதிமுக மயிலாப்பூர் எம்எல்ஏ நட்ராஜை இன்று ஓபிஎஸ் ஆதரவு அமைச்சர் பாண்டியராஜன் நேரில் சென்று சந்தித்தார்.
சென்னை: தொடர்ந்து, எம்எல்ஏக்கள், எம்பிக்கள், அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் முதல்வர் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்து வரும்நிலையில், இன்று கல்வி அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அதிமுகவைச் மயிலாப்பூர் எம்எல்ஏ நட்ராஜை நேரில் சந்தித்தார்.
முதல்வர் ஓபிஎஸ், "கட்டாயப்படுத்தப்பட்டேன்" என்று சொன்ன பிறகு அதிமுகவின் முக்கிய புள்ளிகள் அவரை திட்டித் தீர்த்தன. அதிமுகவினர் துரோகி என்றனர். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல ஓபிஎஸ்ஸுக்கு உள்ள ஆதரவு அதிகரித்ததைப் பார்த்து "சந்தர்ப்பவாதி ஓபிஎஸ்" என்று சொன்ன மாஃபா பாண்டியராஜன் நேற்று அதே ஓபிஎஸ்ஸை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

இந்நிலையில், சென்னை மயிலாப்பூரில் உள்ள அதிமுக எம்எல்ஏ நட்ராஜை மாஃபா பாண்டியராஜன் சந்தித்தார். முகநூலில் தனது அலுவலகத்திற்கு வந்து மக்கள் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம் என நட்ராஜ் பதிவிட்டிருந்தார். மக்கள் தான் என்னை தேர்ந்தெடுத்தார்கள் மக்களுக்காக நான் உழைப்பேன் என்றும் நட்ராஜ் கூறியிருந்தார். இதனையடுத்து, அலுவலகத்திற்கு சென்று பாண்டியராஜன் நட்ராஜை சந்தித்து பேசினார்.
முன்னதாக, முதல்வர் ஓபிஎஸ்ஸை ஆதரிக்க வேண்டும் என்று முழக்கமிட்டு சி.பி. ராமசாமி சாலையில் உள்ள மயிலாப்புர் எம்எல்ஏ நடராஜ் அலுவலகத்தை அதிமுகவினர் முற்றுகையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. எம்எல்ஏ நட்ராஜ் தான் எந்த அணியிலும் இல்லை என்று நேற்று சொல்லி இருந்த நிலையில், மாஃ.பா பாண்டியராஜனை இன்று சந்தித்துள்ளார். இதனைத் தொடர்ந்து விரைவில் நட்ராஜ் ஓபிஎஸ்ஸை சந்திக்கலாம் என்று மயிலாப்பூர் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications