ஆத்திரம்.. பேப்பரை தூக்கி எறிந்துவிட்டு கிளம்பிய அமைச்சர் பொன்முடி.. மீண்டும் சர்ச்சை! என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

கள்ளக்குறிச்சி : திமுக உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சர் பொன்முடி, பூத் கமிட்டி நிர்வாகிகள் படிவத்தை திமுக நிர்வாகிகள் மீது தூக்கி எறிந்துவிட்டு, கோபமாகக் கிளம்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ தீயாகப் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

"உடன்பிறப்புகளாய் இணைவோம்" என்ற முன்னெடுப்புடன் திமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கையை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அண்மையில் தொடங்கி வைத்தார். இரண்டு மாதங்களில் 1 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்பதற்காக திமுகவினர் களத்தில் இறங்கி தீவிரமாக உறுப்பினர் சேர்க்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Minister Ponmudi outburst at DMK cadres

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரும் திமுக துணைப் பொதுச் செயலாளருமான பொன்முடி தலைமையில் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிது. புதிய நிர்வாகிகளை பூத் கமிட்டி நிர்வாகிகளாக தேர்வு செய்ய வேண்டும் என அமைச்சர் பொன்முடி அறிவுறுத்தி இருந்துள்ளார்

ஆனால், அந்தந்த பகுதி திமுக நிர்வாகிகள் ஏற்கனவே பொறுப்பில் இருந்தவர்களையே பூத் கமிட்டி நிர்வாகிகளாக தேர்வு செய்துள்ளனர். சைலோம் பகுதியில், பூத் கமிட்டி நிர்வாகிகள் தேர்வு தொடர்பான படிவங்களை பூர்த்தி செய்து அமைச்சர் பொன்முடியிடம் வழங்கி உள்ளனர். அமைச்சர் பொன்முடி அந்த படிவத்தை வாங்கிப் பார்த்து, பழைய நிர்வாகிகளே அதில் இருந்ததால் ஆத்திரமடைந்து, படிவங்களைத் தூக்கி ஆவேசமாக எறிந்துள்ளார்.

இதேபோல, அரகண்டநல்லூர் பகுதியில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமிலும், பழைய நிர்வாகிகளையே தேர்வு செய்திருந்தனர். திமுக நகர செயலாளர் வழங்கிய படிவத்தினை அமைச்சர் பொன்முடி அவர் முகத்திலேயே வீசி எறிந்தார். காரில் ஏறும்போது, புதியதாக மீண்டும் படிவங்களை பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என்று கோபமாகச் சொல்லிவிட்டு சென்றார் பொன்முடி. இதனால் நிர்வாகிகள் இடையே பரபரப்பு ஏற்பட்டது.

https://tamil.oneindia.com/news/bangalore/karnataka-assembly-election-2023-bjp-to-release-list-of-candidates-sunday-night-506517.html

ஏற்கனவே மகளிருக்கு இலவச பேருந்து விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கியிருந்தார் அமைச்சர் பொன்முடி. ஒரு கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி பேசியபோது, இப்போ பஸ்சில் எப்படி போறீங்க.. இங்கிருந்து எங்கே போக வேண்டுமானாலும் எல்லாரும் ஓசி பஸ்சில் போறீங்க என்று கூறினார். அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்தனர்.

இப்போது அமைச்சர் பொன்முடி, கட்சிக்காரர்களிடம் கோபமாக நடந்து கொள்வது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சராக இருப்பவர் பொதுவெளியில் அடிக்கடி கோபத்தைக் காட்டி சர்ச்சையில் சிக்குவது திமுகவினர் மத்தியில் விவாதமாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+