தேவையில்லாமால் அதிமுக எனும் சிங்கத்துடன் மோதுகிறார் கமல்ஹாசன்...அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாய்ச்சல்
தமிழக அரசை விமர்சிக்கும் யோக்கியதை கமல்ஹாசனுக்கு இல்லை என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை: தமிழக அரசை விமர்சித்து இன்று டுவிட்டரில் பதிவிட்டுள்ள கமல் ஹாசனுக்கு தமிழக அரசை விமர்சிக்கும் யோக்கியதை கிடையாது என்று பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல் சுதந்திர தினமான இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழகத்தில் ஏராளமான குற்றங்கள் நடந்த போதிலும் முதல்வர் ஏன் இன்னும் ராஜினாமா செய்யவில்லை. அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எந்த கட்சியும் கோராதது ஏன் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு கடும் கண்டனத்தை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும், தமிழக அரசை விமர்சிக்கும் யோக்கியதை கமல்ஹாசனுக்கு இல்லை என்று தெரிவித்துள்ள ராஜேந்திர பாலாஜி, விளம்பரத்துக்காகத் தேவையில்லாமல் சிங்கத்துடன் கமல் மோதுகிறார் என்று எச்சரித்துள்ளார்.

கிண்டல் அறிக்கை
ஜெயலலிதா இறந்த போதே, கிண்டல் செய்வது போன்றுதான் அறிக்கை வெளியிட்டவர் கமல். தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுக்கமே இல்லாதவர் அவர் அதிமுகவை விமர்சிக்கத் தேவையில்லை என்றும் கூறினார்.

பொத்தாம் பொதுவாகக் கூறுவதா?
தமிழகத்தில் வகுப்பு சண்டை, இனச் சண்டை, மதச் சண்டை என எதுவுமே நடைபெறவில்லை. பொத்தாம் பொதுவாக சொல்லாமல் என்ன ஊழல் நடந்தது என்று கமல் சொல்ல வேண்டாமா என்றும் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

காழ்ப்புணர்ச்சி
மேலும், விஸ்வரூபம் பட பிரச்சனையில் இருந்தே கமலுக்கு அதிமுகவின் மீது காழ்ப்புணர்ச்சி இருந்து வருகிறது என்று அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார். அதனால்தான் தொடர்ந்து கமல் அதிமுகவை விமர்சித்து வருகிறார் என்று ராஜேந்திர பாலாஜி கூறினார்.

திமுக பேச்சாளர் கமல்
கமல்ஹாசன் பேசும் கருத்தெல்லாம் திமுக நடிகரின் கருத்தாகவே நாங்கள் பார்க்கிறோம் என்றும் திமுகவின் குரலாகவே கமல்ஹாசன் பேசி வருகிறார் என்றும் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் எங்கு ஊழல் இருக்கிறது என்று ஆணித்தரமாக நிரூபிக்க முடியுமா என அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications