மழையை விடுங்க கமல்.. புயல் வந்துச்சுல்ல, அப்ப எங்க போனீங்க.. ராஜேந்திர பாலாஜி கிடுக்கிப்பிடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஸ்ரீவில்லிபுத்தூர்: அதிமுக ஆட்சியை விமர்சிக்க நடிகர் கமல்ஹாசனுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேட்டுள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாவது: அதிமுக ஆட்சியை விமர்சிக்க நடிகர் கமல்ஹாசனுக்கு எஎன்ன தகுதி இருக்கிறது. கமல்ஹாசன் டுவிட்டரில் மட்டுமே அரசியல் செய்பவர்.

Minister Rajendra balaji slams Kamalhaasan has no rights to criticise admk government

ஜெயலலிதா உயிருடன் இல்லாததால் குறுகிய காலத்தில் அரசியல் தலைவராக கமல் முயற்சி செய்கிறார். மழைக்கு நடவடிக்கை இல்லை என்று கூறும் கமல்ஹாசன் தமிழம் புயலால் பாதிக்கப்பட்ட போது எங்கே போனார்.

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அரசை குறை கூறுவது என்பது எதிர்க்கட்சியின் கடமை அதை செய்கிறார்கள். மத்திய அரசு எங்கள் பக்கம் இருக்கிறது என்று நான் சொல்லிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் எப்போதும் நியாயத்தின் பக்கம் உள்ளன என்று ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

அண்மையில் அதிமுகவின் அரசுக்கு மத்திய அரசு பக்க பலமாக இருக்கிறது. ட்ரம்ப்பே வந்தாலும் அதிமுக அரசை ஒன்றும் செய்ய முடியாது எல்லாத்தையும் மேலே இருக்குற மோடி பார்த்துக் கொள்வார் என்று கூறி சர்ச்சையில் சிக்கினார். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் குறித்து விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TN minister Rajendra balaji says at Srivilliputhur that actor kamalhaasan is doing politics only at twitter and he has no rights to criticise ADMK government.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற