50 திமுக எம்.எல்.ஏக்கள் அதிமுகவிற்கு வர ரெடி - அதிர்ச்சி தரும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நொந்து போய் உள்ளனர். முதல்வர் அழைத்தால் அ.தி.மு.க.விற்கு வர 50 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தயாராக உள்ளனர் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை கூறியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்லில் நகர அ.தி.மு.க. சார்பாக அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து பேசினார். அப்போது அவர், சிவகாசி, திருத்தங்கல் உள்பட விருதுநகர் மாவட்டம் முழுவதிலும் தாமிரபரணி தண்ணீரை கொண்டு வந்தது முதல்வர் ஜெயலலிதாதான்.

Minister Rajndra Balaji says 50 DMKs set to switch to ADMK

சிவகாசி, திருத்தங்கல்லிற்கு மேலும் சில புதிய குடிநீர் திட்டங்களை நிறைவேற்ற முதல்வர் நிதி ஒதுக்கியுள்ளார். சிவகாசிக்கு ரூ.135 கோடி மதிப்பீட்டிலும், திருத்தங்கல்லிற்கு ரூ.68கோடி மதிப்பீட்டிலும் ராஜபாளையத்திற்கு ரூ.150 கோடி மதிப்பீட்டிலும் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு முதல்வர் ஜெயலலிதா நிதி ஒதுக்கியுள்ளார்.

சிவகாசிக்கு புதிய அரசு கலை கல்லூரியை கொண்டு வந்துள்ளோம். அரசு மருத்துவமனையை ஹைடெக் மருத்துவமனையாக தரம் உயர்த்திக் கொடுத்துள்ளோம். சிவகாசிக்கு சிறப்பு அந்தஸ்து பெற்றுக் கொடுத்துள்ளோம். சிவகாசி பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பட்டாசு ஆலைகள் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் புதிய சாலைகள் அமைத்துக் கொடுத்துள்ளோம். பட்டாசு தொழிலார்களுக்கு புதிய பட்டாசு பயிற்சி மையம் அமைத்துக் கொடுத்துள்ளோம். புதிய பட்டாசு பயிற்சி மையம் மூலம் பட்டாசு வெடி விபத்துகள் குறைந்துள்ளது. இத்தனை திட்டங்களை செய்து முடித்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு இரட்டை சின்னத்தில் ஓட்டுப்போட மக்கள் தயாராக உள்ளனர் என்றார்.

திருத்தங்கல், சிவகாசி உட்பட மாவட்டத்தில் உள்ள எந்த பதவிகளிலும் தி.மு.க. ஜெயிக்கக்கூடாது. அனைத்து உள்ளாட்சி பதவிகளிலும் அ.தி.மு.க.தான் மாபெரும் வெற்றிபெறும். காவிரி பிரச்சினையில் முதல்வர் நடவடிக்கையை தி.மு.க.வை தவிர அனைத்து கட்சிகளும் பாராட்டி வருகின்றன என்று கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திடீரென ஒரு அணுகுண்டை வீசினார்.

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நொந்து போய் உள்ளனர். முதல்வர் அழைத்தால் அ.தி.மு.க.விற்கு வர 50 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தயாராக உள்ளனர். உள்ளாட்சியில் முதல்வர் ஜெயலலிதாவின் நல்லாட்சி தொடர்ந்திட அ.தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறிவிட்டு நகர்ந்தார். அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சொன்ன அந்த திமுக எம்.எல்.ஏக்கள் விசயத்தைத்தான் நம்புவதா வேண்டாமா என்று நினைத்தவாரே அதிமுக தொண்டர்கள் கலைந்து போனார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+