அமைச்சர் செந்தில் பாலாஜி பாதுகாப்பு வாகனம் கவிழ்ந்து 6 பேர் படுகாயம்
கரூர்: கரூர் அருகே அமைச்சர் செந்தில் பாலாஜியின் பாதுகாப்பு வாகனம் கவிழ்ந்து 4 போலீஸார் உள்பட 6 பேர் காயமடைந்தனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கடவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள்களை வழங்கிவிட்டு, மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பிதுரை, தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி ஆகியோர் தங்களது வாகனங்களில் பாலவிடுதி பள்ளிக்குச் சென்றனர்.

அப்போது, அவர்களது வாகனங்களின் பின்னால் சென்ற அமைச்சரின் போலீஸ் பாதுகாப்பு வாகனம் கடவூர் அருகே திடீரென கவிழ்ந்தது. இதில், உதவி ஆய்வாளர் சரவணன், ஜீப் ஓட்டுநர் ஆயுதப்படைக் காவலர் வேலுசாமி, கார்த்திக், செந்தில்குமார் காயமடைந்து மணப்பாறையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
மேலும் அமைச்சரின் பாதுகாப்பு வாகனத்தில் இருந்த அமைச்சரின் உள்ளூர் தொலைக்காட்சியான ஜெயம் டி.வி கேமரா மேன் அசோக்குமார், ஜெயா டி.வி கேமரா மேன் மோகன் ராஜ் ஆகியோரும் படுகாயமடைந்த நிலையில் மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications