சுத்தமா இருக்கும் கோயில எதுக்கு சுத்தப்படுத்தணும்? நல்லா செய்றாரு அண்ணாமலை.. சேகர்பாபு அட்டாக்
திருப்போரூர்: சுத்தமாக இருக்கும் கோயில்களை சுத்தம் செய்யும் வித்தை பாஜகவில்தான் உள்ளது என தமிழக அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா ஜனவரி 22 ஆம் தேதி நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

அயோத்தி ராமர் கோயில் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்யவுள்ளார். ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கான சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
இதற்காக பிரதமர் மோடி கடந்த 12 ஆம் தேதி 11 நாட்கள் விரதத்தை தொடங்கினார். அவர் சில சடங்குகளையும் பின்பற்றி வருகிறார். அதிகாலையில் மந்திரம் சொல்வது, தியானம் செய்வது, சாத்வீக உணவுகளை மட்டும் உண்பது என விரதம் இருந்து வருகிறார்.
ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் கோயில்களில் தூய்மை பணி மேற்கொள்ளுமாறு பிரதமர் மோடி மக்களை கேட்டுக் கொண்டிருந்தார். அந்த வகையில் கடந்த வாரம் மகாராஷ்டிராவின் நாசிக்கில் உள்ள காலாராம் கோயிலின் வளாகத்தை பிரதமர் மோடி சுத்தம் செய்திருந்தார்.
மேலும் அவர் செல்லும் ராமர் கோயில்களில் சுத்தம் செய்யும் பணியை செய்து வருகிறார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆன்மீக சுற்றுப்பயணமாக ராமநாதபுரம் வந்தார். அங்கு திருப்புல்லாணி ஆதி ஜெகந்நாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். பிறகு பதஞ்சலி முனிவர் நினைவிடத்தில் தனது மனைவியுடன் தூய்மை பணியில் ஆளுநர் ஈடுபட்டிருந்தார்.
அது போல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் இன்று கோயிலில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். சென்னை திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் கோயிலில் குப்பைகளை கூட்டி சுத்தம் செய்து கோயிலை அண்ணாமலை கழுவினர். அவருடன் பாஜக நிர்வாகிகளும் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தார்.
இந்த நிலையில் இதுகுறித்து அமைச்சர் சேகர்பாபு கூறியிருப்பதாவது: சுத்தமாக இருக்கும் கோயில்களை சுத்தம் செய்யும் வித்தை பாஜகவில்தான் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதற்காக ஆளுநர் துணை போய் சுத்தம் செய்கிறேன் என்று புறப்பட்டுள்ளார். ஏற்கெனவே கோயில்கள் அனைத்தும் சுத்தம் செய்கிறேன் என புறப்பட்டுள்ளார். இவ்வாறு சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா











Click it and Unblock the Notifications