செல்லூர் ராஜூ ஸ்லீப்பர் செல் இல்லை.. டிடிவி தினகரன் திடீர் பல்டி
அமைச்சர் செல்லூர் ராஜூ ஸ்லீப்பர் செல் இல்லை என டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.
திருச்சி: அமைச்சர் செல்லூர் ராஜூ ஸ்லீப்பர் செல் இல்லை என டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.
சசிகலாவுக்கு ஆதரவாக அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று பேட்டியளித்தார். இதுகுறித்து தினகரனிடம் கேட்டபோது ஏற்கனவே கூறியது போல் எங்களின் ஸ்லீப்பர் செல்கள் எடப்பாடி அணிக்குள் இருப்பது உண்மை, அவர்கள் தேவைப்படும் நேரத்தில் வெளியே வருவார்கள் என்றார்.

சிஆர் சரஸ்வதியும் இதேக் கருத்தை தெரிவித்தார். இதனால் அமைச்சர் செல்லூர் ராஜூ ஸ்லீப்பர் செல்லா என்ற சந்தேகம் எழுந்தது.
ஆனால் தான் ஸ்லீப்பர் செல் இல்லை என கண்ணீர் மல்க கூறினார் அமைச்சர் செல்லூர் ராஜூ. மேலும் தான் ஸ்லீப்பர் செல் தினகரன் கூறியது தவறு என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் அமைச்சர் செல்லூர் ராஜூ ஸ்லீப்பர் செல் இல்லை எனக்கூறியுள்ளார். ஸ்லீப்பர் செல்களின் பெயர்களை நான் எப்படி வெளிப்படையாக கூற முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் நடராஜனுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தது குறித்து அரசு விசாரணை நடத்தினால் நடத்தட்டும் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications