டெங்குவைக் கட்டுப்படுத்த அரசு சுனாமி வேகத்துல செயல்படுது - அமைச்சர் செல்லூர் ராஜூ- வீடியோ
டெங்குவைக் கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு சுனாமியை போல வேகமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
மதுரை: டெங்குவைக் கட்டுப்படுத்த தமிழக அரசு சுனாமி வேகத்தில் செயல்பட்டுக்கொண்டுள்ளது என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
மதுரையில் நேற்று விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, செய்தியாளர்களிடம் கூறும்போது தமிழகத்தில் அதிமுகவை ஆட்சியில் அமர்த்தியதில் சசிகலாவின் பங்கு பெரிது.

ஆனால், ஜெயலலிதாவின் பிள்ளையாக நான் என் சுய விருப்பு வெறுப்புகளை அடக்கிக்கொண்டுள்ளேன். நான் கூறும் கருத்துக்கள் முதல்வரும் ஈபிஎஸுக்கும் துணை முதல்வரும் ஓபிஎஸ்ஸுக்கும் பாதகமாக அமைந்துவிடக் கூடாது.
எங்களுடையே ஒரே எதிரி திமுக. கருணாநிதி வழியில் மு.க.ஸ்டாலின் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். அவர் எங்கள் மீது வைக்கும் விமர்சனங்களுக்கு பதில் சொல்வதுதான் அமைச்சராக என் கடமை.
டெங்குவை ஒழிப்பதில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது செவிலியர்களையும் மஸ்தூர்களையும் பணிக்கு எடுப்பது குறித்து அரசு ஆலோசனை நடத்திக்கொண்டுள்ளது.
மேலும், தமிழக சுகாதாரத்துறை அமைச்சரும், செயலாளரும் 24 மணிநேரமும் செயல்பட்டுக்கொண்டு உள்ளார்கள். டெங்குக் காய்ய்ச்சல் பரவும் வேகத்தைவிட, அரசு சுனாமி வேகத்தில் செயல்பட்டு டெங்குக் காய்ய்ச்சலை கட்டுப்படுத்தி வருகிறது என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications