Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடிகர் கமலுக்கு அரசு நிர்வாகம் பற்றி என்ன தெரியும்? செல்லூர் ராஜூ அதிரடி!

நடிகர் கமல்ஹாசனுக்கு அரசு நிர்வாகம் பற்றி என்ன தெரியும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஏன் இரு சக்கர வாகனம் இப்போது கொடுக்க வேண்டும்-செல்லூர் ராஜூ பதில்- வீடியோ

    சென்னை: நடிகர் கமல்ஹாசனுக்கு அரசு நிர்வாகம் பற்றி என்ன தெரியும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

    அதிமுக அரசுக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கும் ஏழாம் பொருத்தமாக உள்ளது. அரசு குறித்தும் அமைச்சர்கள் குறித்தும் நடிகர் கமல்ஹாசன் டிவிட்டரில் விளாசி வருகிறார்.

    அரசியல் கட்சியை அறிவிக்கப்போவதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் அரசு தோல்வியடைந்து விட்டதாக தெரிவித்தார்.

    கமல் குறித்து கேள்வி

    கமல் குறித்து கேள்வி

    இந்நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கமல் கூறியது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    கமலுக்கு என்ன தெரியும்

    கமலுக்கு என்ன தெரியும்

    அதற்கு பதிலளித்த அவர்கள் அரசை குறை சொல்பவர்கள் சொல்லிக் கொண்டேதான் இருப்பார்கள் என்றார். கமல் முதலில் அரசியல் கட்சி தொடங்கட்டும், அவருக்கு ஆட்சி நிர்வாகத்தை பற்றி என்ன தெரியும் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பினார்.

    ஊடகத்தில்தான் பேசுகிறார்

    ஊடகத்தில்தான் பேசுகிறார்

    கமல் ஊடகத்தில்தான் பேசி வருகிறார் என்றும் அவர் கூறினார். வேலைக்கு செல்லும் பெண்கள் பேருந்து மற்றும் ரயில்களில் செல்வதால் சந்திக்கும் சிரமங்களை குறைக்கவே மானிய விலை ஸ்கூட்டர் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

    பதில் சொல்வதில்லை

    பதில் சொல்வதில்லை

    நியாயமான கோரிக்கைகள் இருந்தால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுப்பார் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். அரசை தேவையற்று வேண்டுமென்றே குறை சொல்பவர்களுக்கு தாங்கள் பதில் சொல்வதில்லை என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+