"லோக்கல்" மட்டும் போதும்.. மத்தவங்க தேவையில்லை.. நிருபர்களை விரட்டிய அமைச்சரின் பி.ஏ.!

Subscribe to Oneindia Tamil

கரூர்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்காக உயிர் நீத்த குடும்பத்தினருக்கு நல நிதி வழங்கும் நிகழ்ச்சி குறித்த செய்தி சேகரிக்க வந்த பத்திரிகையாளர்களை போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் மாவட்டச் செயலாளருமான செந்தில் பாலாஜியின் உதவியாளரான தியாகராஜன் விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுக பொதுசெயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா கைது செய்யப்பட்டதை கேட்டறிந்து உயிரிழந்த அதிமுகவினர்களுக்கு ரூ 3 லட்சம் வழங்குவதாக ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் அங்குள்ள அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அ.தி.மு.க விற்காக உயிரிழந்தவர்கள் வீட்டிற்கு சென்று நலம் விசாரித்து அம்மா அறிவித்த நிதியினை கடந்த சில நாட்களாக கொடுத்து வருகிறார்கள்.

Minister Senthil Balaji's PA chases media men

அதேபோல கரூர் மாவட்டம், கரூர் ஒன்றியம், தளவாபாளையத்தில் அ.தி.மு.க வை சார்ந்த மறைந்த பாக்கியராஜ் வீட்டிற்கு துணை சபாநாயகரும், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் தம்பித்துரை, தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் மாவட்ட கழக செயலாளருமான வி.செந்தில் பாலாஜி மற்றும் கட்சியின் முன்னோடிகள் சென்று அ.தி.மு.க பொதுசெயலாளர் அறிவித்த நிதியினை அவர்கள் வழங்கி ஆறுதல் கூறினார்கள்.

அந்த நிகழ்ச்சிக்கு பெயருக்கு ஒருசில நிருபர்களை தவிர யாருக்கும் எவ்வித அழைப்பும் வரவில்லை. இருந்தாலும் கேள்விப்பட்ட ஒருசில நிருபர்கள் மிக வேகமாக செய்தி சேகரிக்க சென்ற போது. அந்த நிருபர்களை பார்த்து கரூர் மாவட்ட செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான வி.செந்தில் பாலாஜியின் உதவியாளர் தியாகராஜன் அத்தனை பேர் கூடியிருக்கும் பொது இடத்தில் கூப்பிட்டு, எங்கள் நிருபரை தவிர (ஜெயம் டி.வி யை தவிர) யாரும் வர வேண்டாம் என்று கூறி நிருபர்களிடம் கடுமையாக நடந்து கொண்டார்.

இதனால் அதிமுக நிகழ்ச்சிகளில் இனி கரூர் மாவட்ட நிருபர்கள் கலந்து கொள்வதில்லை என்ற முடிவை நிருபர்கள் எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா கூட அனைத்து நிருபர்களையும் அழைப்பது வழக்கம். இப்படி இருக்க அமைச்சரின் பிஏவின் செயல் மற்றும் தடை கரூர் செய்தியாளர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயம் டிவி என்பது செந்தில் பாலாஜி உள்ளூரில் நடத்தி வரும் லோக்கல் டிவியாம். அதான் 'லோக்கல்' மட்டும் போதும் என்று மற்றவர்களை தடுத்து விட்டார்களோ என்னவோ....!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+