இதய கோளாறு: அமைச்சர் செந்தூர் பாண்டியன் மருத்துவமனையில் அனுமதி
சென்னை: இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன் இதயக் கோளாறு காரணமாக சென்னையில் உள்ள மலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன் திங்கட்கிழமை தலைமைச் செயலகத்திற்கு வந்தார். மாலையில் அங்கிருந்து கிளம்பிய அவர் தனக்கு நெஞ்சு வலிப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை அடையாறில் உள்ள மலர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு இதய ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பதாக தெரிவித்தனர். மேலும் அவரை உடனே உள்நோயாளியாக அனுமதிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து செந்தூர் பாண்டியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த செய்தி அறிந்த முதல்வர் பன்னீர் செல்வம் மருத்துவமனைக்கு சென்று செந்தூர் பாண்டியனை சந்தித்து உடல் நலம் விசாரித்தார். செந்தூர் பாண்டியனுக்கு இன்று ரத்தக் குழாய் அடைப்பை போக்க ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட உள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் தொகுதியைச் சேர்ந்தவர் செந்தூர் பாண்டியன் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications