பாஜக கோவை மக்களுக்கு செய்த துரோகம் மிகப்பெரியது.. திருடனுடன் ஒப்பிட்டு அமைச்சர் சிவசங்கர் பேச்சு
அரியலூர்: ஆண்டிமடத்தில் புதிய மகளிர் விடியல் பேருந்து சேவையினை தொடங்கி வைத்த அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது கோயம்புத்தூருக்கு சென்ற தமிழ்நாடு முதலமைச்சருக்கு பாஜகவினர் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தது குறித்த கேள்விக்கு, திருடன் கூட்டத்தில் போகும்போது திருடன் தான் என்று காட்டிக் கொள்ளாமல் திருடன் ஓடுகிறான் ஓடுகிறான் என கூறுவான். அதே போல் பாஜக கோவை மக்களுக்கு செய்த துரோகம் மிகப்பெரியது என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
அரியலூர் மாவட்டத்தில் முத்துவாஞ்சேரி, சுத்தமல்லி, ஆண்டிமடம் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து பல்வேறு வழித்தடங்களில் 10 மகளிர் விடியல் பேருந்து சேவையினை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆண்டிமடத்தில் புதிய மகளிர் விடியல் பேருந்து சேவையினை தொடங்கி வைத்த அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது கோயம்புத்தூருக்கு சென்ற தமிழ்நாடு முதலமைச்சருக்கு பாஜகவினர் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தது குறித்த கேள்விக்கு திருடன் கூட்டத்தில் போகும்போது திருடன் தான் என்று காட்டிக் கொள்ளாமல் திருடன் ஓடுகிறான் ஓடுகிறான் என கூறுவான். அதே போல் பிஜேபி கோவை மக்களுக்கு செய்த துரோகம் மிகப்பெரியது. அவர்கள் வழங்க வேண்டிய மெட்ரோ ரயில் திட்டத்தை வழங்கவில்லை.
ஆனால் பிரதமர் மோடியை அழைத்து வந்து விவசாயிகளை ஏமாற்றும் நாடகத்தை போட்டார்கள். பிரதமர் மோடிக்கு கோவை மக்கள்(கருப்பு கொடி)காட்டி இருக்க வேண்டும் அதை மடைமாற்றும் வகையில் தேவையில்லாமல் ஒரு பிரச்சாரத்தை மேற்கொண்டு உள்ளார்கள் ஒட்டுமொத்தமாக மாநில உரிமைக்கு எதிராக இருக்கின்ற பாஜக, மாநில உரிமைகளை பறிக்கின்ற பாஜக, எஸ்ஐஆர் கொண்டு வந்து ஓட்டுரிமையை பறிக்கின்ற பாஜக மக்களை மடைமாற்றலாம் திசை மாற்றலாம் என்று நினைத்தால் ஏமாந்து போவார்கள். இதற்கான விளைவை அவர்கள் சந்திப்பார்கள் என்றார்.
வெளி மாநில தொழிலாளர்களும் வாக்குரிமை கேட்டு எஸ்ஐஆர் படிவங்கள் வழங்கி உள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் சிவசங்கர், பாஜக ஏற்கனவே ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே மொழி ஒரே மதம் ஒரே ரேஷன் கார்டு என பலவிதத்தில் அவர்கள் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள துடிக்கிறார்கள். அதன் ஒரு அங்கம் தான் இது. அதனாலதான் தமிழ்நாடு முதலமைச்சர் துவக்கத்திலிருந்து எஸ்ஐஆரை தீவிரமாக கண்காணிப்பாக பார்க்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். நாங்கள் அது குறித்து மிகுந்த நுணுக்கமாக அந்த பணியை செய்து வருகிறோம் என்றார்.
தமிழகத்தில் வெளி மாநில தொழிலாளர்களுக்கு வாக்குரிமை அளிக்கலாமா வேண்டாமா என்பதை குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் சிவசங்கர், நீண்ட நாட்களாக இருக்கக்கூடிய வெளிமாநில தொழிலாளர்களுக்கு இங்கேயே தங்கி இருப்பவர்களுக்கு மறுப்பதற்கு இல்லை. இதற்காக அவர்களை மொத்தமாக இங்கே கொண்டுவந்து தங்கள் தேர்தல் வெற்றியை நிலை நாட்டலாம் என்று நினைத்தால் அதற்கு நிச்சயமாக இடமில்லை என கூறினார்.
-
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு!












Click it and Unblock the Notifications