பெருத்த உடல் சிறுக்க சைவம் சாப்பிடுங்கள்... அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அட்வைஸால் சர்ச்சை
ஆரோக்கியமான உடலை பெற அனைவரும் சைவ உணவையே உட்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளது சர்ச்சையாகி உள்ளது.
சென்னை: தன்னைப் போல பெருத்த உடலைப் பெறாமல் இளைத்த உடலைப் பெற சைவ உணவை உட்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளது சர்ச்சையாகி உள்ளது.
சென்னையை அடுத்த கோலப்பாக்கத்தில் வனத்துறை சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்றார். அப்போது அவர் தன்னைப் போல பெருத்த உடலைப் பெறாமல் சிறுத்த உடலைப் பெற சைவ உணவையே உட்கொள்ள வேண்டும் என்றார். எனவே ஆரோக்கியமான உடலைப் பெற சைவ உணவு மட்டுமே உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது இட்லியும் சாப்பிடல சட்னியும் சாப்பிடல என்று சொல்லி பொது மேடையில் மன்னிப்பு கேட்டு பரபரப்பை கிளப்பினார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். அந்த பரபரப்பே தற்போது தான் தணிந்துள்ள நிலையில் சைவ உணவு சாப்பிட வேண்டும் என்று கூறி இருக்கிறார் திண்டுக்கல் சீனிவாசன். ஏற்கனவே மாட்டிறைச்சி தடை விவகாரத்தில் தனி மனிதனின் உணவு பழக்கத்தில் மத்திய அரசு தலையிடுவதாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications