பற்றி எரிந்த சென்னை சில்க்ஸ் கட்டடத்தை என்ன செய்யலாம்.. கமிஷனருடன் அமைச்சர் அவசர ஆலோசனை
இரண்டு நாட்களாக பற்றி எரிந்த சென்னை சில்க்ஸ் கட்டடம் தொடர்பாக அவசர ஆலோசனைக் கூட்டத்தை அமைச்சர் உதயகுமார் தலைமையில் நடைபெற்று வருகிறது.
சென்னை: இரண்டு நாட்களாக சென்னை சில்க்ஸ் கட்டடம் கொழுந்துவிட்டு எரிந்தது. இது தொடர்பான அவசர ஆலோசனை கூட்டம் அமைச்சர் உதயகுமார் தலைமையில் சென்னை கமிஷனர் மற்றும் அதிகாரிகளுடன் நடைபெற்று வருகிறது.
தியாகராயர் நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு தீப்பிடித்து எரிந்தது. தீயை அணைக்க 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் வீரர்கள் போராடி அணைத்தனர்.
இந்நிலையில், தீ கட்டுக்குள் வந்துள்ளதாகவும் தீ கங்குகளை முற்றிலுமாக அணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இடிப்பு
தீ முற்றிலும் அணைந்த பின்னர், இந்தக் கட்டடத்தை அரசே இடித்துத் தள்ளும். பக்கத்து கடைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் கட்டடம் இடிக்கப்படும் என்று அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.

ஆய்வுக்குழு
கட்டடம் இடிக்கும் போது ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய ஐஐடியின் தொழில் நுட்ப வல்லுநுர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆய்வை முடித்த பின்னர், எந்த விதத்தில் கட்டடத்தை இடிப்பது என்று முடிவெடுக்கப்பட உள்ளது.

அவசர ஆலோசனை
இந்நிலையில், சென்னை கமிஷனர் விஷ்வநாதனுடன் அமைச்சர் உதயகுமார் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். அவர்களுடன் அரசு அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

அடுத்த நடவடிக்கை என்ன?
தி. நகர் பகுதியின் பாதுகாப்பு, போக்குவரத்து, கட்டட இடிப்பின் போது கொடுக்க வேண்டிய பாதுகாப்பு ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின்படி அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications