எனது மகள் தன்மயாவுக்கு இன்று பிறந்தநாள்! சட்டசபையில் உதயநிதி உற்சாகம்! மாடத்தில் குடும்பத்தினர்!
சென்னை: சட்டசபையில் விளையாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது மகள் தன்மயாவுக்கு இன்று பிறந்தநாள் எனக் கூறினார்.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில் தினமும் துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் இன்று விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு சட்டசபையில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை, அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு மட்டுமல்ல ஏப்ரல் 11ஆம் தேதி எனது மகள் தன்மயாவுக்கும் பிறந்தநாள் எனக் கூறினார்.
இதைக் கேட்ட சபாநாயகர் உடனடியாக இருவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக் கூறினார். ஓ அப்படியா என்பதை போல் உதயநிதியை பார்த்து ரியாக்ஷன் காட்டிய அமைச்சர் தங்கம் தென்னரசு மாடத்தில் அமர்ந்திருந்த உதயநிதி ஸ்டாலின் குடும்பத்தினருக்கு வணக்கம் வைத்தார்.
உடனடியாக இதை கவனித்த திமுக எம்.எல்.ஏ.க்கள் அவர்களும் மாடத்தில் அமர்ந்திருந்த உதயநிதி ஸ்டாலின் குடும்பத்தினரை நோக்கி வணக்கம் வைத்தனர்.
மேலும், எல்லாவற்றுக்கும் மேலாக தனது மகன் என்ன பேசுகிறார், என்னென்ன அறிவிப்புகளை வெளியிடுகிறார் என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் மிகுந்த கவனத்துடன் கவனித்துக் கொண்டிருந்தார்.

அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் முதல் மானியக் கோரிக்கை விவாதம் என்பதால் அவர் என்ன பேசுகிறார் என்பதை பார்ப்பதற்காக அவருக்கு நெருக்கமான தரப்பினர் சட்டசபை வந்திருந்தனர்.
முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசியதை போல் முதல் மானியக் கோரிக்கை விவாதத்திலேயே அனுபவம் வாய்ந்த அமைச்சர்களை போல் தடுமாறாமல் பேசி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
-
கே.என்.நேரு மீது FIR.. உள்ளே இழுக்கப்பட்ட உதயநிதி நண்பர் ரத்தீஷ்! விஜய் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications