For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"அம்மா" நீடூழி வாழ.. மீண்டும் முதல்வராக... தங்கத் தேர் இழுத்து.. 108 தேங்காய் உடைத்து..!

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டும், நீடூழி வாழ வேண்டும் என்று வேண்டி அதிமுகவினர் பல்வேறு பிரார்த்தனைகள், வேண்டுதல்களை தொடர்ந்து வரும் நிலையில் சென்னையில் அமைச்சர் பா. வளர்மதி தலைமையில் பல்வேறு வகையான பிரார்த்தனைகள் நடந்தேறின.

தென்சென்னை வடக்கு மாவட்ட கழக அண்ணா தொழிற் சங்க செயலாளர் ஏ.ஏ. ஆர்ஜூனன் ஏற்பாட்டில் இந்த நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

Minister Valarmathi leads spl pooja for Jaya

இதில் சமூக நலம் மற்றும் சத்துனவு திட்டத்துறை அமைச்சர் பா.வளர்மதி தலைமையில் திருவேற்காடு கருமரியம்மன் கோவிலில் சிறப்பு அபிசேகம் செய்தும் தங்கத்தேர் இழுத்தும் 108 தேங்காய் உடைத்தும் 108 சுமங்கலி பெண்களுக்கு சேலை வழங்கியும் வழிபட்டனர்.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பி.வி. ரமணா, அப்துல் ரஹிம், துனை மேயர் பெஞ்சமின் ஆகியோர் சிறப்பு வழிபாடு செய்தனர். உடன் ஆவடி குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Minister Valarmathi leads spl pooja for Jaya

தங்கத் தேருக்கு இணையாக ஜெயலலிதாவின் படத்தை ஒருவர் தூக்கிப் பிடித்திருந்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது இங்கு கண்டிப்பாக குறிப்பிடப்பட வேண்டியதாகும்!

English summary
Minister Valarmathi led a special pooja for Jayalalitha in a temple near Chennai today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X