For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போலீஸ் பணியிடமாற்றத்தில் தலையிட்டாரா அமைச்சர் வேலுமணி?

By Raj
Google Oneindia Tamil News

சென்னை: இடமாற்றத்தால் பாதிக்கப்பட்ட இன்ஸ்பெக்ர்கள் வேலுமணியிடம் முறையிட்டுள்ளனர்.

போலீஸ் டி.ஐ.ஜிக்கள் 4 பேரை நேற்று அதிரடியாக மாற்றினார் உள்துறை செயலர் நிரஞ்சம் மார்டி. இதில் முக்கியமானவர் கோவை டி.ஐ.ஜி தீபக்தமோர். இவரை ஆயுதப்படை பிரிவுக்கு அதிரடியாக மாற்றிவிட்டனர். இதற்கு காரணம் அமைச்சர் வேலுமணிதான் என்கிறார்கள்.

கோவை மாவட்டத்துக்கு சமீபத்தில் 15 இன்ஸ்பெக்டர்கள் ட்ரான்ஸ்பர் செய்யப்பட்டிருந்தனர். அவர்களுக்கு பணி இடம் ஒதுக்கும் அதிகாரம் டி.ஐ.ஜி.க்கு தாம் உண்டு என்பதால் கோவை மாவட்டத்தில் 2,3 வருடங்களாக ஒரே ஸ்டேசனில் இருந்த இன்ஸ்பெக்டர்களை மாற்றிவிட்டு புதிதாக வந்தவர்களை நியமித்திருக்கிறார்.

புகார்

புகார்

இதனால், பாதிக்கப்பட்ட பலரும் வேலுமணியிடம் முறையிட, அவர் உள்துறை செயலரிடம் சொல்ல, அவரோ டிஜிபியிடம் சொல்ல, டிஜிபி இதனை விசாரிக்கிறார். விசாரணை முடிவில், இது தொடர்பாக தலைமைச் செயலாளர் கிரிஜாவைத்தியநாதனை அழைத்து காட்டமாக பேசியிருக்கிறார் கவர்னர்.

சர்ச்சை

சர்ச்சை

காவல்துறை செயல்பாட்டில் அமைச்சர் வேலுமணி தலையிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்பெக்டர்கள் நீண்ட காலம் ஒரே காவல் நிலையத்தில் பணியாற்றியதாலே மாற்றப்பட்டுள்ளனர்.

ஊழல் தடுப்பு

ஊழல் தடுப்பு

நீண்டகாலம் ஒரே காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர்கள் பணியாற்றும்போது, ஊழல்களுக்கு அது வழி வகுக்கும் என்பதால் பணியிடமாற்றம் அவசியமாகிறது.

பரபரப்பு

பரபரப்பு

இந்த நிலையில் அமைச்சர், பணியிடமாற்ற விவகாரத்தில் தலையிட்டது சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இது ஆளுநர் கவனத்திற்கும் போயுள்ளது அரசு மட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Minister Velumani intervened in police transferes which was irked Governor.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X