நெஞ்சு வலிப்பதாக கூறி அப்பல்லோவில் அட்மிட் ஆன 'நத்தம்' .. காலையில் கிளம்பிப் போனார்!
சென்னை: நெஞ்சு வலிப்பதாக கூறி நேற்று இரவு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், தனக்கு தலைமைச் செயலகத்தில் வேலை இருப்பதால், மாலையில் வருவதாக கூறி விட்டு காலையில் கிளம்பிச் சென்றார்.
தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன். இவர் அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவில் தங்கியுள்ளார். நேற்று இரவு அமைச்சருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அமைச்சருக்குப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

காலையிலும் பரிசோதனைகள் நடந்துள்ளன. அதன் பின்னர் தனக்கு தலைமைச் செயலகத்தில் வேலை இருப்பதால் போய் விட்டு மாலையில் வருவதாக டாக்டர்களிடம் கூறினாரா் அமைச்சர் விஸ்வநாதன். டாக்டர்களும் அதற்கு அனுமதி தரவே தற்போது அங்கிருந்து கிளம்பி வந்து விட்டார் அமைச்சர் விஸ்வநாதன். இன்று மாலை மீண்டும் அவர் மருத்துவமனை செல்வார் என்று தெரிகிறது.
நெஞ்சு வலிப்பதாக கூறி மருத்துவமனையில் சேர்ந்து, அலுவலகத்தில் வேலை இருப்பதாக கூறி அமைச்சர் விஸ்வநாதன் கிளம்பிச் சென்றது தலைமைச் செயலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications