For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குண்டு வெடிப்பில் உயிரிழந்த ஸ்வாதி உடலுக்கு அமைச்சர்கள் அஞ்சலி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பில் உயிரிழந்த ஸ்வாதியின் உடலுக்கு தமிழக அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பயணிகளை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காலை 7 மணியளவில் இரட்டை குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் ஸ்வாதி என்ற பெண் பலியானார். 14 பேர் காயமடைந்தனர்.

Ministers B. Valarmathi and Abdul Rahim pay homage to Swathi

உயிரிழந்த பெண்ணின் உடல் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த அனைவரும் அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ரயில் குண்டு வெடிப்பு சம்பவம் பற்றி கேள்விப்பட்ட உடன் முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் அமைச்சர்கள் பா.வளர்மதி, அப்துல் ரகீம் ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்று காயம் அடைந்தவர்களை பார்த்து ஆறுதல் கூறினார்கள். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றி கேட்டறிந்தனர். தீவிர சிகிச்சைக்கும் உத்தர விட்டனர்.

பின்னர் குண்டு வெடிப்பில் உயிரிழந்த ஸ்வாதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

English summary
Minister B. Valarmathi and Minister Abdul Rakeem pay homage to Swathi, who lost her life in the bomb blasts at the Central Railway Station on Thursday
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X