ஓ.பன்னீர் செல்வமாக இருப்பதன் கஷ்டத்தைப் பாருங்க.... பெயரைச் சொல்லாமலேயே விழாவில் பேசிய அமைச்சர்கள்!
கரூர்: கரூரில் நடந்த அரசு விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர்கள் மருந்துக்குக் கூட முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் பெயரைச் சொல்லவில்லை. அதை விட இரட்டை இலைச் சின்னம் பொறிக்கப்பட்ட கோப்பைகளும் இந்த அரசு விழாவில் வழங்கப்பட்டதால் சலசலப்பும் ஏற்பட்டது.
கரூரில் பள்ளி கல்வி துறை சார்பில் தர்மபுரி , சேலம் , நாமக்கல் , ஈரோடு , கரூர் , திருச்சி , பெரம்பலூர் , புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களை சேர்ந்த கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வு கூட்டம் தனியார் பள்ளி கூட்ட அரங்கில் பள்ளி கல்விதுறை அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்சியில் 10 ,12 ஆம் வகுப்பு அரசு பொதுதேர்வில் 100% தேர்ச்சி பெற்ற 220 பள்ளிகளுக்கு தமிழக அரசின் சார்பில் தலைமை ஆசிரியர்களுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டது.

கோப்பையில் இரட்டை இலை
இக்கோப்பைகளில் அதிமுகவின் கட்சி சின்னமான இரட்டை இலை வடிவில் தயாரிக்கபட்டிருந்தது.

அரசு விதிகளுக்குப் புறம்பாக
அரசு துறை செயலாளர்கள் , மாவட்ட ஆட்சியர் , போக்குவரதுறை அமைச்சர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்ட விழாவில் அரசு விதிகளுக்கு மாறாக இச்செயல் மக்கள் வரிபணத்தில் அரங்கேற்றம் செய்து ஒரு தவறான முன்னுதாரனத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் பெயரைச் சொல்லவே இல்லை
மேலும் இந்நிகழ்ச்சியில் சிறப்புறையாற்றிய பள்ளி கல்வி துறை அமைச்சர் கே.சி.வீரமணி, போக்குவரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேசுகையில் ஒரு முறை கூட தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்தின் பெயரை உச்சரிக்கவில்லை.

அப்படீன்னா பன்னீர் செல்வம் யாரு
இதனால் தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் தானா என அரசு அதிகாரிகள் , கல்வி துறை அதிகாரிகளுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் ஜயத்தை ஏற்படுத்தியுள்ளது.

வார்த்தைக்கு வார்த்தை மக்கள் முதல்வர் மட்டுமே
நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு தற்போது ஜாமினில் வெளிவந்திருக்கும் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா பெயரை வார்த்தைக்கு வார்த்தை மக்களின் முதல்வர் என்றும் தமிழக முதல்வர் என்றும் அமைச்சர்கள் தன்னிலை மறந்தவராக பேசியதை கேட்ட அனைத்து அரசுதுறை அதிகாரிகளும் மனதளவில் அதிர்சி அடைந்தாலும் உதட்டளவில் அதனை வெளிக்காட்டாமல் தங்கள் இருக்கையிலே அணிச்சை செயலாக நெளிந்தது இதுவரை இல்லாத மரபாக உள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications