அதிமுக எம்எல்ஏக்கள் சிறை வைக்கப்பட்டுள்ள ரிசார்ட்டுக்கு அமைச்சர்கள் விசிட்.. பரபரப்பில் கூவத்தூர்!

எம்எல்ஏக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள கூவத்தூர் ரிசார்ட்டுக்கு அமைச்சர்கள் விரைந்துள்ளதால் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாமல்லபுரம் அருகே உள்ள கூவத்தூர் ரிசார்ட்டுக்கு அமைச்சர்கள் விரைந்துள்ளனர். அமைச்சர்களும் அதிமுக நிர்வாகிகளும் அடிக்கடி ரிசார்ட்டுக்கு காரில் வந்து செல்வதால் கூவத்தூர் பகுதியில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஓ.பன்னீர்செல்வத்துக்கு பயந்து மன்னார்குடி கோஷ்டி அதிமுக எம்எல்ஏக்களை மாமல்லபுரம் அருகே உள்ள ரிசார்ட்டில் தங்க வைத்துள்ளனர். நேற்றிரவு 3 சொகுசு பேருந்துகளில் நேற்றிரவு அழைத்து வரப்பட்டனர்.

Ministers Visits Koovathur resort to meet MLAs

நேற்றிரவு முதல் எம்எல்ஏக்கள் ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இதற்கு பல்வே தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

எம்எல்ஏக்களை சிறைபிடித்துள்ள சசிகலாவுக்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கூவத்தூர் ரீசார்ட்டுக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், சிவி.சண்முகம், செல்லூர் ராஜு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் கூவத்தூர் ரிசார்ட்டுக்கு விரைந்துள்ளனர்.

அமைச்சர்களும், அதிமுக நிர்வாகிகளும் அடிக்கடி காரில் சென்று வருகின்றனர். இதனால் கூவத்தூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ரிசார்ட் பகுதியில் நுழைய பொதுமக்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதிமுக எம்எல்ஏக்கள் சிறை வைப்பால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+