சிறுபான்மையினரில் திமுகவுக்கு 25% - அதிமுகவுக்கு 24% ஆதரவு!!
சென்னை: லோக்சபா தேர்தலில் சிறுபான்மையினரில் திமுகவுக்கு 25% பேரும் அதிமுகவுக்கு 24% பேரும் ஆதரவு தெரிவிப்பதாக ஜூனியர் விகடன் சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலையொட்டி நாள்தோறும் கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன. ஜூனியர் விகடன் வாரம் இருமுறை ஏடும் தொடர்ந்து கருத்து கணிப்புகளை வெளியிட்டு வருகிறது.
இந்த வாரம் சிறுபான்மையினர் வாக்கு யாருக்கு என்ற தலைப்பில் ஒரு சர்வே நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது.

திமுகவுக்கு 25% பேர் ஆதரவு
இந்த சர்வேயில் திமுகவுக்கு ஆதரவளிப்பதாக 24.81% பேர் தெரிவித்துள்ளனர். அதிமுகவுக்கு 24.09% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பாஜகவுக்கு 13%
பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவளிப்பதாக 12.62% பேர் தெரிவித்துள்ளதாக கூறுகிறது சர்வே. காங்கிரஸ் கட்சிக்கு 15% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ராகுலுக்கு 44% பேர் ஆதரவு
பிரதமர் பதவிக்கு யார் தகுதியானவர் என்பதற்கு ராகுலுக்கு 44.41% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மோடிக்கு 24.35% பேரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 31.24% பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மோடிக்கு எதிர்ப்பு
மேலும் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்ப்பதாக 51.05% பேர் கூறியுள்ளனர்.

பாஜக அணிக்கு ஓட்டு இல்லை
பாரதிய ஜனதா அணிக்கு ஓட்டுப் போடமாட்டேன் என்று 73.79% பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

எதிரி யார்?
சிறுபான்மையினரின் முக்கிய எதிரி பாஜகதான் என்று 57.30% பேரும் காங்கிரஸ்தான் என்று 15.43% பேரும் கூறியுள்ளனர்.

பதற்றத்துடன்..
தமிழகத்தில் சிறுபான்மையினர் பதற்றத்துடன் வாழ்வதாக 37.28% பேர் கூறியுள்ளனர். அதேபோல் மதவாதத்தை தீவிரமாக எதிர்க்கும் கட்சி இடதுசாரிகள்தான் என்று 31.1.7% பேர் கூறியுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications