Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாயமான ஏஎன் 32 விமானத்தை தேடும் பணியில் 4 கப்பல்கள்- ஆழ்கடலில் தேடும் பணி ஆரம்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 29 பேருடன் மாயமான விமானப்படை விமானத்தை கடலுக்கு அடியில் தேடும் பணியில் 4 கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சாகர்நிதி, சமுத்திர ரத்தினகார் ஆகிய 2 ஆராய்ச்சி கப்பல்களும் இன்று முதல் ஆழ்கடலில் தேடும் பணியை தொடங்கியுள்ளன.

இந்தக் கப்பலில் புவியியல் துறை தலைமை விஞ்ஞானி ஜி.நாகேந்திரன் தலைமையில் 8 விஞ்ஞானிகள் செல்கின்றனர். இதேபோல ஒவ்வொரு கப்பலிலும் கடல்சார் விஞ்ஞானிகள் தலைமையில் ஒரு ஆராய்ச்சிக் குழுவினர் உள்ளனர். இவர்கள்தான் மாயமான விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபடுகின்றனர்.

சென்னை தாம்பரம் விமானப்படைத் தளத்தில் இருந்து அந்தமானுக்கு கடந்த 22ம் தேதி ஏ.என்-32 ரக ராணுவ சரக்கு விமானம் 29 பேருடன் புறப்பட்டு சென்றது. நடுவானில் பறந்தபோது அந்த விமானம் திடீரென மாயமானது.

இந்த விமானத்தை தேடும் பணியில் போர்க்கப்பல்கள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன. ஆனால் எதிலுமே நம்பகமான தகவல்கள் கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து கடலின் மேற்பரப்பில் விமானத்தை தேடும் பணி கடந்த 2ம் தேதியுடன் நிறுத்தப்பட்டது.

விமானம் கடலுக்கு அடியில் ஆழமான பகுதிக்குள் கிடக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகப்படுகின்றனர். எனவே, கடலின் ஆழத்தில் தேடும் திறன் படைத்த கப்பல்களை வைத்து, மாயமான விமானத்தை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

ஆழ்கடலில் தேடும் பணி

ஆழ்கடலில் தேடும் பணி

‘நிருபக்' என்ற கடற்படை கப்பலும், ஒரு நீர்மூழ்கிக் கப்பலும் கடலுக்கு அடியில் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன. தேசிய கடல்சார் ஆராய்ச்சி மையத்துக்குச் சொந்தமான ‘சாகர்நிதி', மத்திய புவியியல் ஆராய்ச்சித் துறைக்குச் சொந்தமான ‘சமுத்திர ரத்னாகர்' ஆகிய 2 ஆராய்ச்சிக் கப்பல்களையும் மாயமான விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபடுத்த அதிகாரிகள் முடிவு செய்தனர்.

தயார் நிலையில் ஆராய்ச்சிக் கப்பல்கள்

தயார் நிலையில் ஆராய்ச்சிக் கப்பல்கள்

சமுத்திர ரத்னாகர் ஆராய்ச்சிக் கப்பல் மங்களூருவில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை வந்தது. இதில், ஒரு மாதத்துக்கான எரிபொருள், மீட்புக் குழுவினருக்கான ஒரு மாத உணவு போன்ற அத்தியாவசிய பொருள்களை ஏற்றும் பணி முடிவடைந்தது.

தேடுதல் வேட்டை

தேடுதல் வேட்டை

சாகர்நிதி, சமுத்திர ரத்தினகார் ஆகிய 2 ஆராய்ச்சி கப்பல்களும் இன்று முதல் தேடுதல் பணியை தொடங்கியுள்ளன. விமானம் விழுந்ததாகக் கூறப்படும் 20 கடல்மைல் சுற்றுவட்டாரப் பகுதியில் சாகர்நிதி கப்பலும், வெளி சுற்றுவட்டாரப் பகுதியில் 30 கடல்மைல் பகுதியில் சமுத்திர ரத்னாகர் கப்பலும் தேடும் பணியை தொடங்கியுள்ளன.

8 விஞ்ஞானிகள்

8 விஞ்ஞானிகள்

ஒவ்வொரு கப்பலிலும் கடல்சார் விஞ்ஞானிகள் தலைமையில் ஒரு ஆராய்ச்சிக் குழுவினர் உள்ளனர். இவர்கள்தான் மாயமான விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபடுகின்றனர். விமானம் பற்றி ஏதாவது தடயம் கிடைத்தால் மட்டுமே மாயமான விமானத்தில் பயணித்தவர்களின் கதி என்னவானது என்பதை அறிய முடியும் என்கின்றனர் விமானப்படை அதிகாரிகள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+