நெல்லையிலிருந்து மாயமான ஆசிரியையும், மாணவனும்.. புதுச்சேரியில் கண்டுபிடிப்பு?
புதுச்சேரி: எம்.எஸ்.சி படித்த ஆசிரியையுடன் மாயமான பத்தாம் வகுப்பு மாணவன் புதுச்சேரியில் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்து. இதனையடுத்து அவர்களை கடந்த ஒருவாரகாலமாக தேடிவரும் தனிப்படை போலீசார் புதுவைக்கு விரைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம், கருப்பன் கோவில் வடக்கு தெருவை சேர்ந்தவர் சந்திரகுமார். இவரது மகன் சிவசுப்பிரமணியன் (15). தென்காசி இலத்தூர் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தான்.
வசதியான வீட்டுப்பையன் என்பதால் செல்லமாக வளர்ந்த அவனிடம் கைநிறைய பணம் புழங்கியுள்ளது. காஸ்ட்லி செல்போன், ஏழெட்டு சிம் என்று வைத்துக்கொண்டு ஊர் சுற்றியுள்ளான்.
தனியார் பள்ளியில் படித்துவரும் இந்த மாணவன் ஏற்கனவே ஒரு டீச்சருக்கு லவ் லெட்டர் கொடுத்து அது சிக்கலாகியுள்ளது. இதனையடுத்து ஆசிரியை கோதை லட்சுமி பக்கம் திரும்பியுள்ளார் அந்த மாணவர். இருவரும் ஒரு வருடமாக பழகி இப்போது இருவரும் ஊரைவிட்டே எஸ்கேப் ஆகியுள்ளனர். சொந்த ஊரை விட்டு ஓடிய இருவரும் தற்போது ஊர் ஊராக சுற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னையில் தஞ்சம்
10 நாட்களுக்கு மேல் ஆகியும் மாணவனும், ஆசிரியையும் எங்கு சென்றார்கள் என்ற விவரம் தெரியாமல் இருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் சிவசுப்பிரமணியனும், ஆசிரியை கோதை லட்சுமியும் சென்னை கும்மிடிபூண்டி அருகே மறைந்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

நகைகளை அடகு வைத்து
இதை தொடர்ந்து, கடையநல்லூர் போலீசார் தலைமையிலான தனிப்படை போலீசார், கும்மிடிப்பூண்டிக்கு வந்து ஆசிரியை-மாணவனை தேடினர். ஆனால் அவர்கள் அங்கு இல்லை. கடந்த 15 நாட்களாக ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருக்கும் இவர்கள் நகைகளை அடகு வைத்து செலவு செய்வதாக தெரிகிறது.

தனிப்படை தேடுதல் வேட்டை
இவர்களை பிடிப்பதற்காக புளியங்குடி டி.எஸ்.பி. வானுமாமலை தலைமையில் ஒரு தனிப்படையும் கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் சாம்சன் தலைமையில் ஒரு தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில் தற்போது புதிய தகவல்கள் கிடைத்துள்ளது.

பள்ளியில் வேலை கேட்டு
கடந்த இரு நாட்களுக்கு முன் சென்னை அருகே உள்ள கும்மிடிப்பூண்டி சென்றுள்ளனர். அங்கு எரவூர் என்ற இடத்தில் தனியார் பள்ளியில் கோதைலட்சுமி வேலை கேட்டுள்ளார். அவரது ஊர் பெயர் விவரம் விசாரித்த பள்ளி நிர்வாகத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரியில் தஞ்சம்
ஏற்கனவே இவர்களை பற்றிய செய்தி டிவி, நாளிதழ்கள், வார இதழ்களில் வெளியாகியுள்ளதால் உஷரான பள்ளி நிர்வாகம் இதுகுறித்து அங்குள்ள போலீசுக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள். இதையறிந்த ஆசிரியை கோதைலட்சுமி, போலீஸ் பிடியில் சிக்கினால் சிக்கல் என கருதி மாணவனுடன் பேருந்து ஏறி புதுச்சேரிக்கு சென்றுவிட்டதாக தெரிகிறது.

தனிப்படை விரைவு
தற்போது அவர்கள் புதுச்சேரியில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளதால் தனிப்படையினர் அங்கு விரைந்துள்ளனராம்.அங்கும் அவர் இருக்கிறாரா, இல்லையா என்று தெரியவில்லை.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications